சவுட்டு மண் குவாரி என்ற பெயரில் ஆற்றில் மணல் கொள்ளை: பொதுமக்கள் புகார்

மழைக் காலங்களில் ஊருக்குள் வெள்ளநீர் புகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்

Update: 2023-05-31 04:15 GMT

 தனிநபர் ஒருவர் விவசாய நிலங்களில் வண்டல் மணல் அல்ல அனுமதி மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி பெற்றுள்ளார்.

பெரியபாளையம் அருகே அத்தங்கி காவனூர் ஊராட்சி கொசஸ்தலை ஆற்றின் கரையை உடைத்து ஜேசிபி இயந்திரங்கள் மூலம சூறையாடும் சவுட்டு மண. கரையை சேதப்படுத்துவதால் மழைக் காலங்களில் ஊருக்குள் வெள்ளநீர் புகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், அத்தங்கி காவனூர் கிராமப் பகுதியில் கொசஸ்தலை ஆறு செல்கிறது. இந்த ஆற்றை ஒட்டி சிலர் விவசாயிகள் சுமார் 30 ஆண்டுகளுக்கு மேலாகவே ஆற்றின் அருகே உள்ள நிலங்களை சிலர் ஆக்கிரமிப்பு செய்து காய்கனிகள், நெற்பயிர் உள்ளிட்ட வகைகளை விவசாயம் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் தனிநபர் ஒருவர் விவசாய நிலங்களில் வண்டல் மணல் அல்ல அனுமதி மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி பெற்றுள்ளார். இந்த பர்மிட் ஆனது ஒரு ஆண்டுக்கு வரை விலை நிலங்களை குறிப்பிட்ட அளவிற்கு விவசாயிகள் அனுமதியும் பெற்று அவர் நிலங்களில் சவுட்டு மண் எடுத்து விற்பனை மற்றும் செங்கல் தயாரிக்கும் தொழிற்சாலை களுக்கு விற்பனை செய்து வருகிறார்கள்.

இதனை எடுத்து இந்த பயன்பாட்டை பயன்படுத்தி ஆற்றின் கரை ஓரத்தில் ஆக்கிரமிப்பு செய்து விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு சிலரிடம் பணத்தை ஆசை காட்டி ஆற்றின் கறைகளை சேதப்படுத்தியும். இதனைப் பயன்படுத்தி ஆற்றில் மணல் கொள்ளையும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்று அப்பகுதி மக்கள் சிலர் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இதுகுறித்து பலமுறை அப்பகுதி மக்கள் வருவாய் துறைக்கும் மாவட்ட நிர்வாகத்திற்கு தெரிவித்தும் எவ்வித நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனை தட்டிக் கேட்க வேண்டிய அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை என்றும் இதே நிலைமை நீடித்தால் மழைக்காலங்களில் ஆற்றில் பெருக்கெடுத்து ஓடும் நீரானது ஊருக்குள் புகுந்து விடும் அபாயமும் உருவாகி உள்ளது எனவே இதனை மாவட்ட நிர்வாகம் கண்டு கொண்டு நடவடிக்கை எடுக்க பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags:    

Similar News