நரிக்குறவர் மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கிய அமைச்சர்..!
செங்குன்றத்தில் மழையால் பாதிக்கப்பட்டு பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ள நரிக்குறவர் மக்களுக்கு நிவாரண உதவிகளை அமைச்சர் நாசர் வழங்கினார்.
செங்குன்றத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நரிக்குறவர் இன மக்களை சந்தித்து நிவாரண உதவிகளை வழங்கினார் அமைச்சர் நாசர்.
திருவள்ளூர் மாவட்டம், மாதவரம் தொகுதி, செங்குன்றம் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் விட்டு,விட்டு கன மழை பெய்து வருகிறது. இதனையடுத்து கனமழையால் பாதிக்கப்பட்ட நரிக்குறவர் இன மக்களை செங்குன்றம் நாராவாரிக்குப்பம் பேரூராட்சியில் உள்ள தனியார் பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
நேற்று மாலை அவர்களை சந்தித்த வெளிநாடு வாழ் தமிழர்கள் நலன் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் 55 நரிக்குறவர் இன மக்களுக்கு பிரட், பால் பிஸ்கட் போர்வை உள்ளிட்ட நிவாரண பொருட்களை வழங்கி நலம் விசாரித்தார்.
அப்போது நரிக்குறவர் மக்கள் தெரிவிக்கையில், மழையால் பாதிக்கப்பட்டு தனியார் பள்ளியில் தஞ்சம் புகுந்த தங்களுக்கு அமைச்சர் நாசர் நேரில் வந்து தங்களை நலம் விசாரித்து நிவாரண பொருட்களை வழங்கியதற்கு தமிழக முதலமைச்சர் மு க. ஸ்டாலின் அவர்களுக்கும், எங்களை நேரில் சந்தித்து உதவிகள் வழங்கிய அமைச்சர் நாசர் அவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவிப்பதாக நரிக்குறவர் மக்கள் உறக்கத்துடன் தெரிவித்தனர்.
உடன் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர், பொன்னேரி வட்டாட்சியர் மதியழகன், செங்குன்றம் நாரவாரிக்குப்பம் பேரூராட்சி மன்ற தலைவர் தமிழரசி குமார் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் திமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.