புரட்சி பாரதம் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்..!
மத்திய அரசின் புதிய மூன்று குற்றவியல் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி புரட்சி பாரதம் கட்சியின் சார்பில் திருவள்ளூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.;
அரசியலில் முதல் வகுப்பில் விஜய் உள்ளார்.முதல் வகுப்பில் தேர்ச்சி பெறட்டும் பின்னர் பார்க்கலாம் என தமிழக வெற்றிக் கழக நடிகர் விஜய் அரசியல் பயணம் குறித்து புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் ஜெகன் மூர்த்தி பேட்டி. அளித்துள்ளார்.
புதிதாக நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட மூன்று குற்றவியல் சட்டங்களை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி திருவள்ளூரில் புரட்சி பாரதம் கட்சியின் சார்பில் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் கண்டன ஆர்ப்பாட்டம் மாநில வழக்கறிஞர் அணி செயலாளர் ஸ்ரீதர் தலைமையில் நடைபெற்றது.
புரட்சி பாரதம் கட்சியின் மாநில தலைவர் ஜெகன் மூர்த்தி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று கண்டன உரையாற்றிய இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் புதிதாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள மூன்று குற்றவியல் சட்டங்களை உடனே திரும்ப பெற வேண்டும் எனவும், இதனால் குற்றங்கள் அதிக அளவில் நடைபெற வாய்ப்புள்ள நிலையில் காவல்துறையினர் தங்களை அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்யவும் வாய்ப்புள்ளது என கண்டன கோஷங்களை எழுப்பினர்.
மேலும் அரசியல் அமைப்பு சட்டத்தில் இந்தி மற்றும் சமஸ்கிருத மொழிகளை திணிக்கும் வகையில் அரசியலமைப்பு சட்டம் ஆங்கிலத்தில் எழுதப்படாமல் அதன் பெயர்கள் சமஸ்கிருதத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. அரசியலமைப்பு சட்டத்தை அவமதிக்கும் செயல் எனவும் மத்திய அரசு உடனே இந்த மூன்று சட்டங்களையும் திரும்ப பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் புரட்சி பாரதம் கட்சியை சேர்ந்த முன்னுருக்கும் மேற்பட்ட மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கட்சியின் தலைவர் ஜெகன்மூர்த்தி கூறும் போது.
புதிதாக கொண்டுவரப்பட்ட இந்த மூன்று அரசியலமைப்பு சட்டங்களையும் புரட்சி பாரதம் கட்சி வன்மையாக எதிர்ப்பதாகவும் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் நடைமுறைக்கு ஒத்து வராது எனவும் தமிழ்நாட்டில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் எனவும் தெரிவித்தார்.
மேலும் நீட் விலக்கு, ஒரே நாடு ஒரே தேர்தல் போன்ற சட்டத்திற்கு எதிர்ப்பு உள்ளிட்ட கருத்துக்களை தமிழக வெற்றிக்காக தலைவர் நடிகர் விஜய் தெரிவித்துள்ளது குறித்த கேள்விக்கு அரசியலில் நடிகர் விஜய் தற்பொழுது ஒன்றாம் வகுப்பு படிக்கிறார். முதலில் அதில் தேர்ச்சி பெற்று வரட்டும். பின்னர் பார்க்கலாம் எனவும், விஜய் அரசியல் பயணம் குறித்து புரட்சி பாரதம் கட்சி தலைவர் ஜெகன் மூர்த்தி விமர்சித்தார்.