பணம் நகைக்காக மூதாட்டியை கொன்ற நபரை போலீசார் கைது செய்தனர்

கொலை செய்த மூன்றே மணி நேரத்தில் குற்றவாளியை போலீஸார் கைது செய்தனர்

Update: 2023-02-19 04:30 GMT

கொலை வழக்கில் கைதான வெங்கடேஷ்.

செங்குன்றம் அருகே பணம், நகைக்காக தனியாக இருந்த மூதாட்டி அடித்து கொலை. கவரிங் கம்மலை பறித்து சென்ற கொலையாளியை 3மணி நேரத்தில் போலீஸார்  கைது செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் ,செங்குன்றம் அடுத்த பாடியநல்லூர் பகுதியை சேர்ந்தவர் மூதாட்டி காணிக்கை மேரி (81). கணவரை இழந்த மூதாட்டி அரசு வழங்கும் முதியோர் உதவித் தொகையை கொண்டு வாடகை வீட்டில் வாழ்ந்து வந்துள்ளார். வாடகை வீட்டில் தனியாக வசித்து வந்த மூதாட்டி அருகில் உள்ள உறவினர்கள் இவருக்கு உணவு அளித்து வந்துள்ளனர். காலை உறவினர்கள் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது மூதாட்டி தலையில் பலத்த காயங்களுடன் சடலமாக கீழே விழுந்து கிடந்துள்ளார். இதுகுறித்து செங்குன்றம் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இறந்து கிடந்த மூதாட்டியின் சடலத்தை கைப்பற்றி பிரேத ப‌ரிசோதனை‌க்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். அதில் மூதாட்டி வசித்து வந்த அதே வளாகத்தில் குடியிருந்து வந்த பெயிண்டரான வெங்கடேஷ் (39) மூதாட்டியை கொலை செய்தது தெரிய வந்தது. இதனையடுத்து வெங்கடேஷை கைது செய்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் முதாட்டியை கொலை செய்து 1000ரூபாய் பணத்தையும், அரை சவரன் கம்மலையும் திருடி சென்றதாகவும், திருடிய கம்மலும் கவரிங் நகை என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.  நகை, பணத்திற்காக மூதாட்டியை கொலை செய்து தலை மறைவான குற்றவாளியை 3-  மணி நேரத்தில் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.




Tags:    

Similar News