ஆடி மாத 4 வார திருவிழாவை முன்னிட்டு பவானி அம்மனை தரிசனம் செய்ய திரண்ட பக்தர்கள்

பெரியபாளையம் பவானி அம்மன் கோவிலில் தரிசனம் செய்ய பக்தர்கள் வந்த வாகனங்களால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது

Update: 2023-08-14 02:45 GMT

பெரியபாளையம் பவானியம்மன் கோயிலில் திரண்ட பக்தர்கள்

பெரியபாளையம் பவானி அம்மன் கோவில் ஆடி மாத 4.வது வார திருவிழாவை முன்னிட்டு படையெடுத்த பக்தர்கள் கூட்டம். பக்தர்கள் வந்த வாகனங்களால் பெரியபாளையத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் ஊராட்சியில் ஆரணி ஆற்றங்கரை அருகே அமைந்துள்ளது சுயம்புவாக எழுந்தருளி புகழ்பெற்ற பவானி அம்மன் திருக்கோவில். இக்கோவிலில் ஆடி மாதம் தொடர்ந்து திருவிழா 14 வார காலம் வெகு விமரிசையாகவும் கோலாகலமாகவும் நடைபெறுவது வழக்கம்.

இந்நிலையில் ஆடி மாத கடைசி ஞாயிற்றுக்கிழமை 4.வது வாரதிருவிழாவை முன்னிட்டு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை தமிழகம் மட்டுமல்லாது ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி, தெலங்கானா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் பெரும் திரளாக பேருந்துகளிலும், சொந்த வாகனங்களிலும்  வந்தனர்.

பெரியபாளையம் கோவில் அருகே உள்ள தனியார் விடுதிகளை வாடகைக்கு எடுத்து தங்கி இருந்த  பெரியவர்கள், மற்றும் சிறுவர்கள்,முதல் மொட்டை அடித்து முடி காணிக்கை செலுத்தியும்,கூழ் ஊற்றியும், கரகம் எடுத்தும் ஆடு,கோழி என பலியிட்டு கோவில் வளாகத்தில் உள்ள  மண்டபத்தில் வாடை பொங்கல் வைத்து. அம்மனுக்கு படையல் வைத்து வழிபட்டனர்

மேலும், குழந்தைகள், பெண்கள் வேப்பிலை ஆடைகளை அணிந்து கையில் தேங்காய் ஏந்தி கோவில் சுற்றி வலம் வந்து இலவச மற்றும் 100 ரூபாய் கட்டண வரிசையில் நீண்ட நேரம் காத்திருந்து தரிசனம் செய்து  நேர்த்தி கடனை நிறைவேற்றிச்சென்றனர்.

4.வது வாரம் என்பதால் பெரியபாளையத்திற்கு பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 1. லட்சத்திற் கும் மேற்பட்ட பக்தர்கள் பவானி அம்மனை தரிசனம் செய்ய வந்தனர். பக்தர்கள் வந்த வாகனங்களாலும். சென்னை-திருப்பதி சாலையில் சுமார் 2.கிலோமீட்டர் அளவிற்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போக்குவரத்து சரி செய்ய போலீஸார் மிகவும் சிரமப்பட்டனர்.

.இது குறித்து ஆலயத்திற்கு வரும் பக்தர்கள் கூறுகையில் பெரியபாளையத்தில் புகழ்பெற்ற பவானி அம்மன் திருக்கோவிலுக்கு ஆடித்திருவிழா என்பதால் தரிசனம் செய்ய வந்தோம். கூட்ட நெரிசல் அதிகமாக இருந்ததால் சுவாமி தரிசனம் செய்ய மிக சிரமப்பட்டும் சிலர் வெளியே நின்றபடி சாமி தரிசனம் செய்தோம்  குழந்தைகள், வயதான முதியவர்கள் சுவாமி தரிசனம் செய்ய மிகவும் அவதிப்பட நேரிட்டது.

திருப்பதி-சென்னை சாலை என்பதால் வெளி மாநிலங்களில் இருந்தும் வரும் கனரக வாகனங்க ளும் இவ்வழியாக வருவதால் கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிப்பதை தவிர்க்கும் வகையில்   புறவழி சாலை அமைத்து விழா காலங்களில் வாகனங்கள்  திருப்பி விட வேண்டும்.

இந்த பவானி அம்மன் ஆலயத்திற்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்லும் இடத்தில் ஆலயத்தின் பின்புறம் செயல்பட்டு வரும் அரசு மதுபான கடையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும்.  மதுபான கடை அருகாமையில் இருப்பதால் மது அருந்தி தேவையில்லா தகராறுகள் ஏற்படும் சூழல் உள்ளது.  எனவே கடையை வேறு இடத்திற்கு மாற்றி அமைத்திட வேண்டும் என்றார். இதே கருத்தையே  கோவிலுக்கு வந்த  பக்தர்களும் பொதுமக்கள் தெரிவித்தனர்.


Tags:    

Similar News