ஊரக வளர்ச்சித்துறை கலந்தாய்வு கூட்டத்தில் பங்கேற்ற ஊராட்சி செயலர் உயிரிழப்பு..!

திருவள்ளூரில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை கலந்தாய்வு கூட்டத்தில் பங்கேற்ற ஊராட்சி செயலர் ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2024-10-22 05:00 GMT

மாரடைப்பால் உயிரிழந்த வெங்கடேசன்.

திருவள்ளூரில் நடைபெற்ற ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை கலந்தாய்வு கூட்டத்தில் பங்கேற்ற ஊராட்சி செயலர் ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்தார்.

திருவள்ளூர் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் ஊராட்சி செயலர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

இதில் திருவள்ளூர் மாவட்டம் முழுவதிலிருந்து குமார் 300-க்கும் மேற்பட்ட ஊராட்சி செயலர்கள் கலந்து கொண்ட இந்த கலந்தாய்வு கூட்டத்தில் ஊராட்சி செயலர்களின் பணிகள் குறித்து இரண்டு மணி அளவில் கூட்டம் தொடங்கப்பட்டு நடைபெற்ற போது

திருத்தணி ஒன்றியம், மத்தூர் ஊராட்சி செயலரான வெங்கடேசன்( வயது 57) திடீரென மயங்கி கீழே விழுந்துள்ளார். உடனடியாக அருகில் இருந்தவர்கள் வெங்கடேசனை மீட்டு சிபிஆர் அளித்து 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அழைத்துச் சென்ற போது, அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ஊராட்சி செயலர் வெங்கடேசன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த சக ஊராட்சி செயலர்கள் மருத்துவமனை வளாகத்தில் குவிந்ததால் மருத்துவமனை வளாகமே சோகமாக காணப்பட்டது. பின்னர் பிரேத பரிசோதனைக்காக அவரது உடல் அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து திருவள்ளூர் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

ஊராட்சி செயலர்கள் ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்ட ஊராட்சி செயலர் ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News