சோழவரத்தில் பனை விதைப்பு, பனைபொருள் உற்பத்தி விழிப்புணர்வு நிகழ்ச்சி

சோழவரத்தில் பனை விதைக்கும் பணி,பனைபொருள் உற்பத்தி மற்றும் பனை கைவினை பொருட்கள் பயிற்சி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

Update: 2023-07-13 02:15 GMT

பனை விதைப்புப்  பணி துவக்கி வைத்த, நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சிறப்பு அழைப்பாளர்கள்.

சோழவரம் ஒன்றியத்துள்ள நெற்குன்றம் ஊராட்சியில் நேற்று தூய்மை இந்தியாவின், இருவார தூய்மை அனுசரிப்பு மற்றும் பசுமை மையமாக்கல் திட்டத்தின் கீழ் பனைவிதை விதைக்கும் பணி மற்றும் பனைபொருள் உற்பத்தி மற்றும் பனை கைவினை பொருட்கள் பயிற்சி குறித்த விழிப்புணர்வு நிகழ்வுகள் நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சயை, திருவள்ளூர் மாவட்ட ஊரக வளர்ச்சித்  துறை மற்றும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் இணைந்து நடத்தியது.


இந்நிகழ்வு, ஊராட்சி மன்ற தலைவர் பாபு தலைமையிலும், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் முதன்மை பொது மேலாளர் ஜி. யோகன்குமார் மற்றும் துணை பொது மேலாளர் கே.வி.வி.சதீஸ்குமார் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்றது. மேலும், இந்நிகழ்ச்சியில் சோழவரம் வட்டார வளர்ச்சி அலுவலர் முரளி மற்றும் நந்தவனம் தொண்டு நிறுவனத்தின் நிர்வாகி விக்கி ஜோசப் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றிய பின்னர் பனைவிதைப்பு பணியை துவக்கி வைத்தனர்.


முன்னதாக, திருவள்ளூர் மாவட்ட பனை விதை வங்கியின் ஒருங்கிணைப்பாளர் பாலகிருஷ்ணன் ஊராட்சியில் விதைப்பு பணியில் ஈடுபடும் பொதுமக்களுக்கு பனை விதைப்பு பணியை மேற்கொள்ளும் விதம் மற்றும் பனை சார்ந்த கைத்தொழில்கள் பயிற்சி குறித்தும், பனையினுடைய மதிப்பு கூட்டு பொருட்களின் உற்பத்தி, அதன் மூலம் அந்த கிராமத்தில் உள்ள மக்கள் வருங்காலங்களில் பெறக்கூடிய வருவாய் வழிமுறைகளை எடுத்துரைத்தார்.

மேலும், இந்நிகழ்சியில், நெற்குன்றம் ஊராட்சியின் வார்டு உறுபினர்கள், ஊராட்சி செயலளார், மக்கள் நலப்பணியாளர் மற்றும் பணிதள பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். இறுதியாக, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஆர்த்திகாபானு நன்றி கூறினார்.

Tags:    

Similar News