வங்கியின் பெயரைக் கூறி இருவரிடம் ஆன்லைனில் நூதன முறை மோசடி

புழல் ராஜ்குமார் கிரெடிட் கார்டில் ரூ.9999/-, அப்துல் லத்தீப் என்பவரது வங்கி கணக்கில் ரூ.44184 மோசடி செய்துள்ளனர்

Update: 2023-11-26 09:15 GMT

வங்கியின் பெயரைக் கூறி இருவரிடம் ஆன்லைனில் நூதன முறை மோசடி

புழலில் வங்கியின் பெயரை கூறி இருவரிடம் ரூ.54000 நூதன முறையில் ஆன்லைன் மோசடி. சைபர் மோசடி கும்பலை கண்டறிய முடியாமல் புழல் போலீசார் திணறி வருகின்றனர்.

சென்னை புழலை சேர்ந்த அப்துல் லத்தீப் என்பவர் பிரபல தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்துள்ளார். அண்மையில் தனிநபர் செல்போன் எண்ணில் இருந்து வங்கி என்ற பெயரில் சுயவிவரங்களை புதுப்பிக்க வேண்டும் (KYC UPDATE) என கூறி இணைப்புடன் குறுஞ்செய்தி ஒன்று வந்துள்ளது. அப்துல் லத்தீப் குறுஞ்செய்தியில் வந்த இணைப்பிற்கு சென்று தமது சுயவிவர குறிப்புகளை பதிவிட்டபோது அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.44184 பணம் எடுக்கப்பட்டதாக வந்த குறுஞ் செய்தியை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இதே போல புழலை சேர்ந்த ராஜ்குமார் பிரபல தனியார் வங்கியின் க்ரெடிட் கார்டை பயன்படுத்தி வருகிறார்.

அண்மையில் வங்கியின் வாடிக்கையாளர் சேவை மையத்திலிருந்துவந்து அழைப்பில் க்ரெடிட் கார்டில் உள்ள கடன் தொகையை (CREDIT LIMIT) 50% உயர்த்தி தருவதாக கூறப்பட்டது. அப்போது ராஜ்குமார் தமது க்ரெடிட் கார்டின் எண்ணையும், அதனை தொடர்ந்து தம்முடைய செல்போனிற்கு வந்த ஓடிபி எண்ணையும் கூறியுள்ளார். சிறிது நேரத்தில் இவரது கடன் அட்டையில் இருந்து ரூ.9999 பணம் எடுக்கப்பட்டதாக குறுஞ்செய்தி வந்துள்ளது.

இது தொடர்பாக சைபர் குற்றங்களை ஆன்லைனில் பதிவு செய்யும் 1930  மூலமாகவும், புழல் காவல் நிலையத்திலும் பாதிக்கப்பட்ட இருவர் தரப்பில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகார்களின் பேரில் ஐபிசி 420 மோசடி, தொழில்நுட்ப சட்டப்பிரிவு என இரண்டு பிரிவுகளில் தனித்தனியே வழக்குகளை பதிவு செய்து புழல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மோசடி மற்றும் இணைய வழி குற்றம் என்பதால் குற்றப்பிரிவு மற்றும் சைபர் பிரிவு என அனைத்து பிரிவு போலீசாரும் மோசடி தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். புழல் சுற்றுவட்டார இடங்களில் தொடர்ந்து ஆன்லைனில் மோசடி செயல்களில் அரங்கேறி வருவது காவல்துறையினருக்கு தொல்லையாய் அமைந்துள்ளது. சைபர் மோசடி கும்பலை பற்றிய துப்பு கிடைக்காமல் புழல் போலீசார் திணறி வருகின்றனர்.



Tags:    

Similar News