திருவள்ளூரில் இந்து முன்னணி சார்பில் 25க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கரைப்பு

திருவள்ளூரில் இந்து முன்னணி சார்பில் 25க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டது.

Update: 2022-09-03 07:30 GMT

ஊர்வலமாக எடுத்துச்சென்ற விநாயகர் சிலைகள்.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நேற்று முன்தினம் திருவள்ளூரில் வைக்கப்பட்ட 25க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகளை சென்னை திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் திருவள்ளூர் மேற்கு மாவட்ட இந்து முன்னணி சார்பில் ஆட்டம் பாட்டம் மேளதாளங்களுடன் வாகனங்களில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு தேரடி காக்கலூர் வழியாக கொண்டு செல்லப்பட்டு காக்களூர் ஏரியில் கரைக்கப்பட்டது.

இதே போல் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு பழவேற்காடு கடலில் கரைக்கப்பட்டது. பழவேற்காடு கடல் பகுதியில் ரோந்து பணியில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் களிமண்ணால் ஆன சிலைகளை மட்டுமே கடலிலும் ஆற்றிலும் கரைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் சிலைகளை கரைத்து வருகின்றனர். மேலும் பழவேற்காடு கடலில் குறைந்த அளவே சிலைகள் கரைக்கப்பட்டு வருகிறது சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அதிக அளவில் வரும் என காவல்துறையில் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News