காக்களூர் தனியார் நிறுவனத்தில் செல்போன் திருடிய நபர் கைது
காக்களூரில் தனியார் நிறுவனத்தில் செல்போன் திருடிய நபரை போலீசார் கைது செய்தனர்.;
திருவள்ளூரை அடுத்த காக்களூர் பகுதியில் தனியார் நிறுவனம் ஒன்றில் இயங்கி வருகின்றது. அந்த தனியார் மோட்டார் சர்வீஸ் நிறுவனத்தில் நேற்று முன்தினம் 2 செல்போன்கள் திருட்டு போனது.
இந்த சம்பவம் குறித்து அந்த செக்யூரிட்டி அலுவலகத்தில் நிர்வாக மேலாளர் சுப்பிரமணியன் அவர்கள் திருவள்ளூர் தாலுகா போலீசில் புகார் தெரிவித்தார். அதை தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் தனியார் கம்பணியில் செல்போன்களை திருடியது சென்னையைச் சேர்ந்த கொரட்டூர் மேட்டு தெருவைச் சேர்ந்த கோவிந்தன் (43)என்பது தெரியவந்தது. இதை தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்து அவரிடம் இருந்த 2 செல்போன்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.