திருவள்ளூர்: புறநகர் ரயில் சேவை தொடக்கம்
திருவள்ளூரில் புறநகர் ரயில் சேவை இன்று முதல் பொதுமக்களுக்கு அனுமதி அளித்ததால் அரசு விதிமுறைகளை பின்பற்றி பொதுமக்கள் பயணித்தனர்
தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை காரணமாக தொற்று பாதிப்பு அதிகரித்து வந்தது. இதனால் தளர்வுகளற்ற ஊரடங்கை தமிழக அரசு பிறப்பித்தது. இதனால் தொற்று பாதிப்பு வெகுவாக குறைந்தது. இதன் காரணமாக கொரோனா ஊரடங்கில் பல தளர்வுகளை தமிழக அரசு அறிவித்து வந்தது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் பேருந்து போக்குவரத்து சேவையையும் தொடங்கப்பட்டுள்ளது.
கொரோனா ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகள் காரணமாக புறநகர் ரயில்களில் முன்கள பணியாளர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு மட்டும் அனுமதி அளித்து வந்தனர். இந்நிலையில் இன்று முதல் சில கட்டுப்பாடுகளுடன் பொதுமக்களும் புறநகர் ரயில்களில் பயணிக்கலாம் என அறிவித்தது.
இதனை தொடர்ந்து இன்று திருவள்ளூர் புறநகர் ரயிலில் பயணிக்க முக கவசம் அணிந்து கொண்டும் சமூக பாதுகாப்புடனும் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து டிக்கெட்களை பெற்று அரசு வழிகாட்டுதல் நெறிமுறைகளை பின்பற்றி பயணம் செய்தனர்.