ஊராட்சி முறைகேடு விசாரணையில் திருப்தி இல்லை : வார்டு உறுப்பினர்கள் குற்றச்சாட்டு..!
திருவள்ளூர் அருகே ஊராட்சியில் முறையான வரவு,செலவு கணக்கு காண்பிக்காத ஊராட்சி தலைவர் மீதான விசாரணை திருப்தி இல்லை என்று வார்டு உறுப்பினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.;
திருவள்ளூர் அருகே ஊராட்சித் தலைவர் முறையான வரவு செலவு கணக்குகளை காண்பிக்காமலும். தங்கள் பகுதியில் அடிப்படை வசதிகளை செய்யாமலையே பணிகளை செய்ததாக முறைகேடு செய்துள்ளதை தட்டிகேட்ட வார்டு உறுப்பினர்களை கொலை மிரட்டல் விடுப்பதாக ஆட்சியரிடம் அளித்த புகாரின் அடிப்படையில் வார்டு உறுப்பினர்களிடம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அலுவலர் விசாரணை. நடத்தினர்.
அந்த விசாரணையில் தங்களுக்கு திருப்தி இல்லை எனவும் விசாரணை அதிகாரிகள் ஒரு தலைப்பட்சமாக நடப்பதாக 5 வார்டு உறுப்பினர்கள் அதிருப்தி.
திருவள்ளூர் அருகே ஈக்காடு ஊராட்சியில் 12 வார்டுகள் உள்ள நிலையில் அதில் கடந்த சில வருடங்களாக ஊராட்சித் தலைவர், துணைத் தலைவர் ஊராட்சி செயலர் ஆகியோர் ஒன்றிணைந்து தங்கள் கிராமத்தில் நடைபெற்று வரும் பணிகள் குறித்தான வரவு,செலவு கணக்குகளை முறையாக வார்டு உறுப்பினர்களிடம் காட்டுவதில்லை எனவும் கிராம சபை கூட்டத்தில் 100 நாள் பணியாளர்களை மட்டும் பங்கேற்க வைத்து முடித்து விடுகிறார்கள்.
தாங்கள் வருவதற்கு முன் கிராம சபையை முடித்து விடுவதாகவும் தங்கள் பகுதியில் அடிப்படை வசதிகள் ஏதும் நிறைவேற்றப்படாததால் தங்களுக்கு வாக்களித்த மக்கள் தங்களை கேள்வி கேட்பதாகவும், பழுதடைந்த சாலை, எரியாத மின்விளக்குகள், பழுதடைந்த மின்கம்பங்கள், பழுதடைந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி,தெரு முழுவதும் கொட்டிக் கிடக்கும் குப்பைகள் உள்ளிட்டவைகளை சீர்படுத்தாமல் சீர்படுத்தியதாக கணக்கு காட்டுகின்றனர்.
அதை தங்களிடமிருந்து மறைப்பதாகவும் இதை தட்டிக் கேட்கும் வார்டு உறுப்பினர்களை தூக்கி விடுவேன் என மிரட்டுவதாக கூறி 10 உறுப்பினர்கள் கடந்த 12.ஆம் தேதி நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கலந்துகொண்டு ஆட்சியரை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.
இந்த நிலையில் மனுவின் அடிப்படையில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை அலுவலகத்தில் 20.ஆம் தேதி அனைத்து வார்டு உறுப்பினர்கள், தலைவர், துணைத் தலைவர், ஊராட்சி செயலர், அனைவரிடத்திலும் விசாரணை நடைபெறும் எனவும் அனைவரும் நேரில் ஆஜராக வேண்டும் என அனைவருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் இது சம்பந்தமாக நேற்று ஈக்காடு ஊராட்சி தலைவர் லசனா சத்யா, துணைத் தலைவர் குணசேகரன்,வார்டு உறுப்பினர்களை ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு அவசர அவசரமாக அழைத்து சமரசம் பேசினார்.
ஐந்து வார்டு உறுப்பினர்கள் மட்டும் கலந்துகொண்டு பேசிய நிலையில்.வராத 5.வார்டு உறுப்பினர்களையும் தலைவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தயவுசெய்து வாருங்கள் எது வேண்டுமானாலும் செய்து தருகிறேன் என கெஞ்சும் நிலைக்கு தள்ளப்பட்டு மீதமுள்ள ஐந்து வார்டு உறுப்பினர்கள் தலைவரை சந்திக்க செல்லாததால் கடந்த 12.ஆம் தேதி புகார் அளிக்க 10.வார்டு உறுப்பினர்களும் ஆட்சியரை நேரில் சந்தித்து புகார் அளித்தனர்.
விசாரணைக்காக இரண்டாவது வார்டு உறுப்பினர் ராஜன். மூன்றாவது வார்டு உறுப்பினர் பலராமன், ஐந்தாவது வார்டு உறுப்பினர் தமிழ்ச்செல்வி, பத்தாவது வார்டு உறுப்பினர் தேவி, 11-வது வார்டு உறுப்பினர் சரவணன் உள்ளிட்ட 5.பேர் மட்டும் விசாரணைக்கு ஆஜராகி தலைவர் உள்ளிட்டோர் தங்களுக்கு வரவு,செலவு கணக்கு காட்டாமல் ஏமாற்றுவதாக கூறி உள்ளனர்.
மேலும் விசாரணை செய்தது தங்களுக்கு ஏற்புடையதாக இல்லை எனவும் தங்களுடன் வந்த மீதம் இருந்த 5.வார்டு உறுப்பினர்களும் தலைவருக்கு ஆதரவாக தங்கள் பகுதியில் அனைத்தும் சிறப்பாக உள்ளது என வாக்குமூலம் அளித்துள்ளது தங்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது எனவும், இருப்பினும் தங்கள் வார்டுகளில் இதுவரை எந்த அடிப்படை பணிகளும் நடைபெறவில்லை எனவும் நடைபெற்ற விசாரணையில் தங்களுக்கு திருப்தி இல்லை என அதிருப்தி தெரிவித்தனர்.
மேலும் மீண்டும் நாளை ஆட்சியரை நேரில் சந்தித்து மனு அளிக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் தலைவர், துணைத் தலைவர் அவர்களுக்கு ஆதரவாக செயல்படும் 5.வார்டு உறுப்பினர்களிடமும்.அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு அவர்களிடம் எழுத்துப்பூர்வமாக பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஊராட்சித் தலைவர்களின் பதவிக்காலம் இன்னும் மூன்று மாதத்தில் முடிவடைய உள்ள நிலையில் தங்கள் கிராமத்தில் அடிப்படை வசதிகள் செய்யவில்லை வரவு,செலவு கணக்குகளை முறையாக தங்களிடம் காட்டவில்லை என வார்டு உறுப்பினர்கள் வைத்துள்ள குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.