சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு பழமையான செல்வ விநாயகருக்கு லட்டு அலங்காரம்..!
திருவள்ளூர் அடுத்த திருப்பந்தியூரில் சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு பழமையான செல்வ விநாயகர் 11,108 லட்டு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.;
ஆனி மாத சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு திருவள்ளுர் அடுத்த திருப்பந்தியூரில் உள்ள பழமையான கோவிலான செல்வ விநாயகர் 11,108 லட்டு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூர் அடுத்த திருப்பந்தியூரில் உள்ள இந்து அறநிலை துறைக்கு சொந்தமான சுமார் 200 ஆண்டுகள் பழமையான செல்வ விநாயகர் கோவிலில்
ஆனி மாத சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு நேற்றைய தினம் செல்வ விநாயகருக்கு பால், தயிர், சந்தனம், இளநீர், தேன் உள்ளிட்ட வாசனை திரவியங்கள் மூலம் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு வண்ண மலர்களால் அலங்காரம் செய்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
முக்கிய நாளான சங்கடஹர சதுர்த்தியை தினத்தை முன்னிட்டு இன்று செல்வ விநாயகருக்கு 11,108 லட்டு அலங்கரிக்கப்பட்டு விநாயகர் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். லட்டுகளால் விநாயகர் அலங்காரம் செய்யப்பட்டு காட்சியளிப்பதை திருப்பந்தியூர் சுற்றியுள்ள கிராம மக்கள் ஏராளமானோர் குடும்பம் குடும்பமாக வருகை தந்து விநாயகரை தரிசனம் செய்து வருகின்றனர்.
அதைத்தொடர்ந்து இன்று காலை பொது மக்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.மதியம் அன்னதானம் வழங்கப்பட உள்ளது. அதைத்தொடர்ந்து விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்ற பின்னர் அலங்காரம் செய்யப்பட்ட லட்டுகள் பிரித்து கிராமத்தில் உள்ள அனைத்து குடும்பங்களுக்கு அளிக்கப்பட உள்ளது.