தவறான சிகிச்சை அளித்ததால் கூலி தொழிலாளி உயிரிழப்பு: உறவினர்கள் வாக்குவாதம்

பெரியபாளையத்தில் தனியார் மருத்துவமனையில் கூலித் தொழிலாளிக்கு தவறான சிகிச்சை அளித்ததால் உயிரிழந்ததாக உறவினர்கள் மருத்துவமனை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு.;

Update: 2024-10-06 04:45 GMT

தவறான சிகிச்சை அளித்ததால் வாலிபர் உயிரிழந்ததாக உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டபோது

பெரியபாளையம் அருகே கூலி தொழிலாளிக்கு உரிய சிகிச்சை அளிக்காததால் உயிரிழந்ததாக கூறி உறவினர்கள் தனியார் மருத்துவமனையை முற்றுகையிட்டதால் பரபரப்பு நிலவியது.

திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அடுத்த வடமதுரை ஊராட்சிக்கு உட்பட்டது பெரியசெங்காத்தாகுளம் பகுதியை சேர்ந்தவர் கூலி தொழிலாளியான பிரவீன் ( வயது 26). இவருக்கு நிர்மலா என்ற மனைவியும், 5 வயது ஆண் குழந்தை,3வயது பெண் குழந்தைகள் உள்ளன.

அண்மையில் உடல்நல குறைவு ஏற்பட்ட பிரவீன் பெரியபாளையம் பஜார் பகுதியில் அமைந்துள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வீடு திரும்பிய சிறிது நேரத்தில் உயிரிழந்துள்ளார். அப்போது குடும்பத்தினர். அவருக்கு இறுதி சடங்குகளை செய்துள்ளனர். இந்நிலையில் நேற்றிரவு நிர்மலா தமது குழந்தைக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் மீண்டும் அதே மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

அப்போது தமது கணவரின் மருத்துவ அறிக்கையை கொடுத்து அவருக்கு உரிய சிகிச்சை அளிக்காததால் உயிரிழந்ததாக கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பெரியபாளையம் காவல்துறையினர் இது தொடர்பாக காவல்துறை மற்றும் சுகாதார துறை அதிகாரிகளிடம் புகார் அளிக்குமாறும் அவர்கள் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பார்கள் என கூறி அவர்களை சமாதானம் செய்து அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.

உரிய சிகிச்சை அளிக்கப்படவில்லை என கூறி உறவினர்கள் தனியார் மருத்துவமனையை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News