திருவள்ளூர் மாவட்டத்தில் ஜமாபந்தி தொடக்கம்: குவிந்த மனுக்கள்

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு வட்டாட்சியர் அலுவலகங்களிலும் இம்மாதம் 23-ம் தேதி ஜமாபந்தி முடிவடைகிறது

Update: 2023-06-07 03:30 GMT

 திருவள்ளூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் இந்த ஆண்டுக்கான ஜமாபந்தி நிகழ்ச்சி  தொடங்கியது.

திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் ஜமாபந்தி இன்று தொடங்கியது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு வட்டாட்சியர் அலுவலகங்களிலும் ஜமாபந்தி நிகழ்ச்சி இன்று தொடங்கி இம்மாதம் 23- ஆம்  தேதி முடிவடைகிறது. பொதுமக்களின் அலைச்சலை தவிர்க்கும் நோக்கத்தில் ஜமாபந்தி நிகழ்ச்சி ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது.

இதில் தீர்க்கப்படாத நீண்டகால பிரச்னைகளுக்கு மனு அளித்தால் தீர்வு காண முடியும் என்பதால் பொதுமக்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு மனு அளித்து வருகின்றனர். இந்நிகழ்ச்சியில் திருவள்ளூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் இந்த ஆண்டுக்கான ஜமாபந்தி நிகழ்ச்சி இன்று தொடங்கியது.

முதல் நாளில் பூந்தமல்லி சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட திருவள்ளூர் ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த 11 கிராமங்களுக்கும், திருவள்ளூர் சட்டப்பேரவை தொகுதிக்கான நகராட்சியைச் சேர்ந்த 27 வார்டுகளுக்கான ஜமாபந்தி நடைபெற்றது. இதில் பூந்தமல்லி சட்டமன்ற உறுப்பினர் ஆ.கிருஷ்ணசாமி கலந்து கொண்டு காக்களூர் பகுதியை சேர்ந்த வேலாயுதம் என்பவர் வீட்டுமனை பட்டா வழங்கி தொடக்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் காயத்ரி சுப்பிரமணியம், திருவள்ளூர் வட்டாட்சியர் மதியழகன் மற்றும் திருவள்ளூர் நகர்மன்ற தலைவர் உதயமலர் பாண்டி மற்றும் அரசு அதிகாரிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News