திருவள்ளூரில் முன்கள பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கல்
திருவள்ளூரில் கொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றிய முன்கள பணியாளர்களுக்கு பாராட்டுச் சான்றிதழை கலெக்டர் வழங்கினார்.;
முதல் அலையில் கொரோனா தொற்றின் பாதிப்பு தமிழக அளவில் 3வது மற்றும் 4வது இடம் பிடித்தது திருவள்ளூர் மாவட்டம்.
புதிய ஆட்சி அமைந்த பிறகு எடுக்கப்பட்ட நடவடிக்கையினால் தொற்று பாதிப்பு வெகுவாக குறைந்தது. இதற்கு பேருதவியாக இருந்த முன்களப் பணியாளர்களுக்கு பாராட்டு தெரிவிக்கும் விதமாக நடைபெற்று முடிந்த 75ம் சுதந்திர தினத்தை முன்னிட்டு முன்களப் பணியாளர்களுக்கு நற்சான்றிதழை திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் வழங்கினார்.
பின்னர், முன்களப் பணியாளர்களுக்கு மதிய உணவினை மாவட்ட ஆட்சியர் தன் கரங்களால் பரிமாறி அவர்களுடன் ஒன்றாக அமர்ந்து உணவு அருந்தினார்.
மேலும் மாவட்ட ஆட்சியர் அருகில் அமர்ந்து உணவு சாப்பிட்ட முன்கள பணியாளர்களிடம் நலம் விசாரித்து சிறப்பாக பணியாற்றிய அனைவருக்கும் வாழ்த்துக்கள் தெரிவித்தார். இந்நிகழ்வில் திட்ட இயக்குனர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.