செங்குன்றம் சார்பதிவாளர் அலுவலகத்தில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை
அதிக தொகைக்கு நடைபெற்றுள்ள பத்திரப்பதிவு குறித்து சோதனை நடத்தப்பட்டு ள்ளதாக தகவல் தெரியவந்துள்ளது
செங்குன்றம் சார் பதிவாளர் அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் சோதனை. அதிக தொகைக்கு நடைபெற்றுள்ள பத்திரப்பதிவு குறித்து சோதனை என தகவல்.
திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் சார் பதிவாளர் அலுவலகத்தில் நாள்தோறும் 100கணக்கான பத்திரப்பதிவுகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இன்று திடீரென 3வாகனங்களில் வந்த 10க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
பத்திரப்பதிவிற்காக கொண்டு வரப்பட்ட ஆவணங்களை ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் அண்மையில் நடைபெற்று முடிந்த பத்திரப்பதிவுகள் தொடர்பாகவும் வருமான வரித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். கடந்த சில நாட்களாக செங்குன்றம் சார் பதிவாளர் அலுவலகத்தில் கோடி கணக்கிலான மதிப்பிலான பல இடங்கள் பத்திரப்பதிவுகள் நடைபெற்றுள்ளதாக கூறப்படும் நிலையில், அது தொடர்பான ஆவணங்களையும், பத்திரப்பதிவு செய்தவர்கள் குறித்தும் ஆய்வு செய்தனர். பத்திரப்பதிவு செய்தவர்கள் விவரங்களையும் வருமானவரித்துறை அதிகாரிகள் சேகரித்து
செய்து வருகின்றனர். துப்பாக்கி ஏந்திய காவல்துறையினர் பாதுகாப்புடன் சார் பதிவாளர் அலுவலகத்தில் நடைபெற்று வரும் சோதனை காரணமாக செங்குன்றம் சார் பதிவாளர் அலுவலகத்தில் பரபரப்பு நிலவியறது.