திருவள்ளூர் புதிய பேருந்து நிலையத்திற்கான பூமி பூஜை : எம்எல்ஏ தொடங்கி வைத்தார்

திருவள்ளுர் புதிய பேருந்து நிலையத்திற்கான அடிக்கல்நாட்டு விழா எம்எல்ஏ வி.ஜி ராஜேந்திரன் மற்றும் ஆட்சியர் ஆல்பீ ஜான் வர்கீஸ் ஆகியோர் தலைமையில் நடந்தது.

Update: 2023-07-11 12:15 GMT

திருவள்ளூரில் புதிய பேருந்து நிலைய கட்டுமானப்பணிகளுக்கு அடிக்கல் நாடும் விழா நடைபெற்றது.

முதலமைச்சரின் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றான திருவள்ளூர் எல்லைக்குட்பட்ட வேடங்கி நல்லூர் பகுதியில் 33 கோடி ரூபாய் மதிப்பிட்டில் கட்டப்பட உள்ள புதிய பேருந்து நிலையத்திற்கான  அடிக்கல் நாட்டு விழாவில் திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி ராஜேந்திரன் மற்றும் ஆட்சியர் ஆல்பீ ஜான் வர்கீஸ் ஆகியோர் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டு விழா பணிகளை தொடங்கிவைத்தனர்.

திருவள்ளூர் நகராட்சியானது முதல் நிலை நகராட்சியில் இருந்து தேர்வு நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. இந்த  நிலையில் 74 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட நகராட்சியாகவும் , திருவள்ளூர் மாவட்டத்தின் தலைநகரமாக இருப்பதால் இங்கு புதிய பேருந்து நிலையம் அமைத்திட வேண்டும் என தமிழக அரசிடமும் திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினரிடமும் பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்தனர். பின்னர் அது  முதலமைச்சரின் தேர்தல் வாக்குறுதியாகவும் அறிவிக்கப்பட்டது.

முதலமைச்சர் ஸ்டாலின் அவரது தேர்தல் வாக்குறுதியை நிறைவு செய்யும்பொருட்டு அதற்காக   பரீசீலனை செய்யப்பட்டு பல்வேறு வசதிகளுடன் கூடிய புதிய பேருந்து நிலையம் அமைத்திட 33 கோடி ரூபாய் நிதி  ஒதுக்கீடு செய்து ஆணை பிறப்பித்தார்.  அதனைத்  தொடர்ந்து 2.02.5 ஹெக்டேர் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டு,  அதில் புதிய பேருந்து நிலையம் கட்டுவதற்காக பணிகளை திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி.ராஜேந்திரன், மாவட்ட ஆட்சியர் ஆல்பீ ஜான் வர்கீஸ் ஆகியோர் கலந்துகொண்டனர். புதிய பேருந்து நிலைய  கட்டுமானப் பணிகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு  அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தனர்.

இந்நிகழ்வில் நகராட்சி ஆணையர் சுரேந்திர ஷா, நகர மன்ற தலைவர் உதயமலர் பாண்டியன். மற்றும் அரசு அதிகாரிகள் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் என ஏராளமானோர் இதில் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News