குறைதீர்க்கும் கூட்டம் கூட்டம்: நலத்திட்ட உதவி வழங்கிய மாவட்ட ஆட்சியர்

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்க்கும் கூட்டத்தில் 40 லட்சத்தில் உதவிகள் வழங்கப்பட்டன

Update: 2023-06-03 03:30 GMT

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்க்கும் கூட்டத்தில் 40 லட்சத்தில் உதவிகள் வழங்கப்பட்டன

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்க்கும் கூட்டத்தில் 40 லட்சத்திற்கான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் ஆல் பி ஜான் வர்கீஸ் பயனாளிகளுக்கு வழங்கினார்.

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் ஆல் பி ஜான் வர்கீஸ் தலைமையில் நடந்த கூட்டத்தில் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பொது மக்களிடமிருந்து 292 மனுக்களை பெறப்பட்டது.

பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட அதில் தகுதியான மனுக்களை அந்தந்த துறைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் தெரிவித்தார். இதனை அடுத்து கும்மிடிப்பூண்டி ஒன்றியம் காரணி கிராமத்தில் பாம்பு கடித்து உயிரிழந்த நபரின் குடும்பத்திற்கு முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து ரூபாய் ஒரு லட்சத்திற்கான காசோலை வழங்கப்பட்டது .

தொடர்ந்து சிறுநீரக பாதிப்பால் அவதிப்படும் நபருக்கு ரூபாய்.10,000 காசோலையும், மற்றும் ஏழ்மை நிலையில் உள்ள இரண்டு நபர்களுக்கு வாழ்வாதாரம் மேம்படுத்தும் வகையில் வாழ்வாதாரம் நிதி ரூபாய்.5,600 மதிப்பீட்டில் தையல் இயந்திரங்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு சமூக பாதுகாப்பு நல வாரியம் திட்டத்தின் கீழ் 18 நபர்களுக்கு கல்வி உதவித் தொகையாக ரூபாய்25,000 ஆயிரம், இயற்கை மரணம் ஈமச்சடங்கு நிதியின் கீழ் 37 பேருக்கு6.29 லட்சம் முதுகுத் தண்டு வடம் பாதித்த8 பயனாளிகளுக்கு சிறப்பு இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் இருசக்கர வாகனம் 1.5 லட்சம் மதிப்பீட்டில் அளிக்கப்பட்டது.

இரு கால்கள் பாதித்து 30 நபர்களுக்கு தலா83,500 இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட இருசக்கர வாகனங்கள் என 93 பேருக்கு ரூபாய் 40 லட்சம் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை திருவள்ளூர் மாவட்ட ஆட்சி தலைவர் ஆல்பி ஜான் வர்கீஸ் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் அசோகன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் காயத்ரி சுப்பிரமணியம், தனி ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) மதுசூதனன், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் செல்வமணி, மாற்றுத்திறனாளிகளின் நல அலுவலர் சீனிவாசன், துணை ஆட்சியர்( பயிற்சி) சுப்புலட்சுமி, மற்றும் அரசு அதிகாரிகள் பொதுமக்கள் என உட்பட பலர் கலந்து கொண்டனர்.




Tags:    

Similar News