ஆளுநரை ஒருமையில் பேசி முதல்வர் மலிவான அரசியல் செய்கிறார் : அர்ஜுன் சம்பத்

ஆளுநர் அவரது கடமையை அரசியல் சாசனப்படி செய்கிறார் என்று இந்து மக்கள் கட்சித் தலைவர் கூறினார்.

Update: 2023-07-11 03:00 GMT

இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத்.

தமிழகத்தில் ஆளுநரை ஒருமையில் பேசி முதல்வர் மலிவான அரசியல் செய்கிறார். அரசியல் சாசனப்படி ஆளுநர் தமது கடமையை செய்கிறார் என்று இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் தெரிவித்தார்.

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த பெரிய மடியூர் பகுதியில் கோயில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவர் செய்தியாளர்களிடம் இவ்வாறு தெரிவித்தார்.

தமிழகத்தில் ஆளுநரை  முதல்வர் ஒருமையில் பேசி மலிவான அரசியல் செய்து மோதல் போக்கை  ஏற்படுத்துகிறார். ஆளுநருடைய செயல்பாடுகள் குறித்து ஜனாதிபதிக்கு கடிதம் எழுதலாம். ஆனால் அதை பத்திரிகையில் கொடுத்திருக்கும் முதல்வர்  ஆளுநர் குறித்து எழுதிய கடிதத்தை  ஜனாதிபதிக்கு அனுப்பினாரா என தெரியவில்லை.

தமிழகத்தில் அரசியல் சாசனப்படி ஆளுநர் தம்முடைய கடமையை செய்கிறார். விசாரணைக்  கைதியான செந்தில் பாலாஜி அமைச்சராக இருப்பதற்கு சட்டத்தில் இடம் இருக்கிறதா? விசாரணைக் கைதி எப்படி மந்திரியாக நீடிக்க முடியும் என கூறும் ஆளுநரை அரசியல்வாதி மாதிரி முதல்வர் கடுமையாக விமர்சனம் செய்து ஒருமையில் பேசுவது கடிதம் எழுதுவது எல்லாமே கண்டிக்கத்தக்க செயல். நாகாலாந்து முதல்வர் சிறுவாபுரியில் சாமி தரிசனம் செய்து வந்தபோது எல்லாருமே வரையறைக்குள் இருக்க வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அறிவுரை கூறினார். 

 ஆளுநர் சட்டத்திற்கு உட்பட்டு தன்னுடைய கடமையை செய்கிறார். அவர் ரப்பர் ஸ்டாம்ப் மாதிரி அல்ல. அரசியல் சாசனத்திற்கு உட்பட்டு அங்கீகரிக்கப்பட்ட பதவி ஆளுநர் பதவி தான் எனவும் கூறினார். ஆளுநர் தான் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார் அந்த ஆளுநரிடம் தான் பல நேரம் மனு கொடுத்தார்கள். அவர்கள் அளித்த மனுவின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது எனவும், விஜயபாஸ்கரை பதவி நீக்கம் செய்ய மனு அளித்தனர் எனவும், ஆளுநர் எந்த இடத்திலும் அரசியல் பேசவில்லை எனவும், ஆளுநருக்கும் முதல்வருக்கும் சுமூகமான உறவு இருக்க வேண்டும் எனவும், மத்திய அரசுக்கும் தமிழகத்திற்கும் சுமுக உறவு இருக்க வேண்டும் எனவும் கூறினார்.  

கருணாநிதியை விட ஸ்டாலின் அறிவாளியா எனவும் அவர் கேட்டார். கருணாநிதி எப்போதும் தமிழகத்தை ஒன்றியம் என்று கூறியிருக்கிறாரா ?  கருணாநிதி, அண்ணாதுரை சொன்னது இல்லை என்றார். பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்பட வேண்டும்.  சட்டம் எல்லாருக்கும் சமம். பொது சிவில் சட்டத்தை வரவேற்பதாகவும், அதற்கான பிரசாரங்களை செய்து வருவதாகவும் கூறினார். 

Tags:    

Similar News