பெரியபாளையத்தில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பிறந்தநாள் விழா..!
கருணாநிதியின் 101 வது பிறந்த நாளை முன்னிட்டு பெரியபாளையத்தில் இனிப்பு அன்னதானம்.;
எல்லாபுரம் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாளை விழா கொண்டாட்டம்.
முன்னாள் தமிழக முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் 101 வது பிறந்த நாளை முன்னிட்டு எல்லாபுரம் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் தலைமை செயற்குழு உறுப்பினரும் எல்லாபுரம் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் பி.ஜே.மூர்த்தி தலைமையில் பெரியபாளையம் பேருந்து நிலையத்தில் வைக்கப்பட்ட கருணாநிதியின் படத்திற்கு ஒன்றிய செயலாளர் மூர்த்தி மாலை அணிவித்து மலர் தூவி, 500 பேருக்கு அறுசுவை உணவு வழங்கினார்.
இதில் பொதுக்குழு உறுப்பினர் ஏ.வி.ராமமூர்த்தி, மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் தண்டலம் என்.கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட ஆதிதிராவிடர் அமைப்பாளர் சம்பத், கலை இலக்கிய பகுத்தறிவு பேரவையின் மாவட்ட அமைப்பாளர் வி. பி.ரவிக்குமார், மாவட்ட கவுன்சிலர் சித்ரா முனுசாமி, மாவட்ட வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் வழக்கறிஞர் சீனிவாசன், நிர்வாகிகள் முஹம்மத் மொய்தீன், தண்டலம் ரவி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ராஜா, ஆத்துப்பாக்கம் வேலு, ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர்கள் ஐ.ராஜா, வடமதுரை அப்புன், தொண்டரணி துணை அமைப்பாளர் பார்த்திபன், தண்டுமா நகர் பன்னீர், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து தண்டுமாநகர், ஏனம் பாக்கம், தண்டலம், வடமதுரை, உள்ளிட்ட பகுதிகளில் கட்சி கொடிகளை ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார். (இதேபோல்)
பெரியபாளையம் அருகே ஆரணி நகர திமுக சார்பில் பேருந்து நிறுத்தகம் அருகே வைக்கப்பட்ட கருணாநிதியின் படத்திற்கு ஆரணி நகர செயலாளர் முத்து தலைமையில் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தி பின்னர் அருகில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து பொது மக்களுக்கு இனிப்பு மற்றும் அன்னதானம் வழங்கினார்.இதில் முன்னாள் நகர செயலாளர்கள் கண்ணதாசன், வெங்கடேசன், பொருளாளர் கரிகாலன், ரமேஷ், கவுன்சிலர்கள் ரஹ்மான்கான், நிலவழகி பொன்னரசி, ரோஸ் பொன்னையா ஆகிய உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.