ஊத்துக்கோட்டை அருகே 6 வழிச் சாலை பணிகளை நிறுத்த விவசாயிகள் போராட்டம்

ஊத்துக்கோட்டை அருகே 6 வழிச் சாலை பணிகளை நிறுத்த விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.

Update: 2023-06-04 02:30 GMT

போராட்டக்காரர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்திய ஊத்துக்கோட்டை வட்டாட்சியர் வசந்தி. 

திருவள்ளுர் மாவட்டம், தச்சூர் முதல் ஆநதிரமாநிலம் சித்தூர் வரை 116 கி.மீ. தூரம் வரை இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் ஆறு வழிச்சாலைப் பணிகள் நடைபெற்று வருகிறது அதற்காக, திருவள்ளுர் மாவட்டத்தில் சுமார் 1238. ஏக்கர் விவசாய நிலங்கள் கையகப்படுத்தப் படுத்தப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.

இதில் ஊத்துக்கோட்டை, பள்ளிப்பட்டு, சித்தூர் ஆகிய இடங்களில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக விவசாயிகள் தரப்பில் எதிர்ப்பு தெரிவித்து, பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்ட நிலையில், திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், ஊத்துக்கோட்டை அருகே சென்னாங்காரணி ஊராட்சி ஏரியில் பணிகளை தொடங்க அதிகாரிகள் ஜேசிபி இயந்திரத்துடன் சென்று ஆறு வழிச்சாலை பணிகளுக்காக  மரங்களை அப்புறப்படுத்தி கொண்டிருந்தனர்.

இதனை அறிந்த விவசாயிகள் 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஒன்று திரண்டு இந்தப் பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஜே.சிபி. இயந்திரத்தை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் போராட்டகாரர்களை தடுத்து நிறுத்தியபோது போரட்டகாரர்களுக்கு, போலீசாருக்கும், தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.

இது குறித்து தகவல் அறிந்து வந்த ஊத்துக்கோட்டை வட்டாட்சியர் வசந்தி, போராட்டக்காரர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அரசுக்கு சொந்தமான இடத்தில் பணிகளை செய்து வருவதாகவும், இதனை விவசாயிகள் தடுக்கக்கூடாது. இது சம்பந்தமாக மாவட்ட ஆட்சியரையும் சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலை துறை அதிகாரிகளை சந்தித்து தீர்வு காணலாம் என்றும் தெரிவித்தார்.

இதில் விவசாய ஒருவர் தெரிவிக்கையில், முப்போகம் விளையக்கூடிய நிலங்களை அழித்து இந்த சாலை அமைப்பது சரி அல்ல என்று கேள்வி எழுப்பி தாசில்தாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் இதன் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததின் பேரில் அனைவரும் கலந்து சென்றனர். இந்தப் போராட்டத்தால் அப்பகுதியில் பதற்றமும் பரபரப்பும் நிலவியது.

Tags:    

Similar News