ஊத்துக்கோட்டை தாலுகா அலுவலகம் முன்பு விவசாயிகள் கருப்பு கொடி பிடித்து ஆர்ப்பாட்டம்

ஊத்துக்கோட்டை தாலுகா அலுவலகம் முன்பு 6 வழிச்சாலை குறித்து விவசாயிகள் சங்கம் கருப்பு கொடி பிடித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.;

Update: 2022-06-01 02:45 GMT

ஊத்துக்கோட்டை தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.

திருவள்ளூர் மாவட்டம் தச்சூர் - முதல் ஆந்திர மாநிலம் சித்தூர் வரை 128 கி.மீ.தூரத்திற்கு ₹ 3200 கோடி செலவில் 6 வழிச்சாலை அமைக்க மத்திய அரசு நிதி ஒதுக்க தமிழக அரசும், ஆந்திர அரசும் இணைந்து தேசிய நெடுஞ்சாலையாக மாற்ற முடிவு செய்துள்ளது. இதற்காக ஊத்துக்கோட்டை வட்டத்தில் மட்டும் 6 வழிச்சாலைக்காக 18 கிராமங்கள் பாதிக்கப்படுகிறது. பள்ளிப்பட்டு மற்றும் பொன்னேரி வட்டத்தில் தலா 6 கிராமங்களும் பாதிக்கப்படுகிறது.

இந்நிலையில் தமிழ்நாடு விவசாயிகள் மற்றும் ஊத்துக்கோட்டை பகுதி நஞ்சை நில விவசாயிகள் சங்கம் சார்பில் ஊத்துக்கோட்டை தாலுகா அலுவலகம் முன்பு கருப்பு கொடி ஏந்தி மத்திய அரசை கண்டித்தும் விவசாய சங்க மாவட்ட தலைவர் சம்பத் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் மாநில விவசாய சங்க தலைவர் பெருமாள், மாவட்ட செயலாளர் துளசி நாராயணன் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டு ஊத்துக்கோட்டை தாலுக்கா அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர். பின்னர் தாலுகா அலுவலகத்தில் தாசில்தாரிடம் ரமேஷ் இடம் மனு கொடுத்தனர். இதில் ஊத்துக்கோட்டை நஞ்சை நல விவசாய நல சங்க நிர்வாகிகள் குணசேகரன் ரெட்டி, சசிகுமார், ஜெயக்குமார் ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News