திருவள்ளூரில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனை

Election Flying Squad திருவள்ளூரில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Update: 2024-03-18 08:30 GMT

Election Flying Squad 

 இந்தியாவின்  ௧௮ வது லோக்சபாவிற்கு ௭ கட்டங்களாக தேர்தல் நடக்க உள்ளது. இந்நிலையில்  தேர்தல் கமிஷன் கடந்த ஞாயிறன்று தேர்தல்  தேதிகளை அறிவித்தது. ஏழு கட்ட தேர்தலுக்கான தேதியை அறிவித்துவிட்டு  அதற்கான தேர்தல் நடத்தை விதிமுறைகளும் உடனடியாக அமல்படுத்துவதாக தேர்தல் கமிஷனர் ராஜீவ்குமார் அறிவித்தார். இதனால் இந்தியா முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது. இருந்தபோதிலும் பலர் பணம் எடுத்து சென்றதற்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் அதனை  அதிகாரிகள் பறிமுதல் செய்து உரிய அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.  

நாடாளுமன்ற தேர்தலுக்கான அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து திருவள்ளூரில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Election Flying Squad 



நாடாளுமன்ற பொதுத்தேர்தல்-2024 தமிழ்நாட்டில் வருகின்ற ஏப்ரல் மாதம் 19-ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையத்தால் நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில், திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் 19.04.2024 அன்று நடைபெற உள்ளது.தேர்தல் நடத்தை விதி அமலுக்கு வந்ததால் வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா செய்வதை தடுக்கும் வகையில் இந்திய தேர்தல் ஆணையம் உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லும் பணத்தை பறிமுதல் செய்யப்படும் என தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்திருக்கிறது.

இதனையடுத்து திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட பட்டரைப்பெரும்புதூர் சுங்கச்சாவடி அருகே பறக்கும் தேர்தல் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்படும் பணம் பறிமுதல் செய்வது உறுதி என்பதால் அவசர தேவைக்காக கொண்டு செல்பவர்கள் உரிய ஆவணங்களை கையில் கொண்டு வர வேண்டும் என மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் எச்சரிக்கை விடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News