லச்சிவாக்கத்தில் திமுக ஒன்றிய நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்..!

ஊத்துக்கோட்டை அருகே லச்சிவாக்கத்தில் எல்லாபுரம் வடக்கு ஒன்றிய திமுக ஒன்றிய நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

Update: 2024-03-28 13:30 GMT

எல்லாபுரம் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் லச்சிவாக்கம் கிராமத்தில் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.  

ஊத்துக்கோட்டை அருகே திருவள்ளூர் கிழக்கு மாவட்டம்  திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதி தேர்தல் - 2024 ,  எல்லாபுரம் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் லச்சிவாக்கம் கிராமத்தில் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்  நடைபெற்றது.  

இதில் தலைமை செயற்குழு உறுப்பினரும்,  எல்லாபுரம் வடக்கு  ஒன்றிய செயலாளருமான பி.ஜெ. மூர்த்தி தலைமை தாங்கினார்.
பொதுக்குழு உறுப்பினர் ஏ.வி.ராமமூர்த்தி , மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி , மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை  அமைப்பாளர் வி.பி. ரவிக்குமார்,  அவைத்தலைவர் ரவிச்சந்திரன் , ஆதிதிராவிட நலக்குழு சம்பத், ஒன்றிய கவுன்சிலர்  சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதி திமுக கூட்டணியின் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் சசிகாந்த் செந்தில் அவர்களை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் எனவும்,  
மேலும் முதல்வரின் சாதனைகள் குறித்து வீடு வீடாக சென்று துண்டு பிரசுரம் மூலம் தெரிவிப்பது என பல்வேறு தீர்மாங்கள் நிறைவேற்றப்பட்டன. 
கூட்டத்தில் மாவட்ட  , ஒன்றிய அணிகளின்  நிர்வாகிகள் வக்கில்கள் சீனிவாசன் , முனுசாமி , கார்த்திகேயன் , பனப்பாக்கம் ராஜேஷ், விஜயபிரசாத், முகம்மது மொய்தீன், சிவாஜி,  ஜமுனா அப்புன்,  சிவசங்கர், ஜெ.வேலு,  டில்லிசங்கர் , வடிவேல்  உட்பட பலர் கலந்துகொண்டனர். 
Tags:    

Similar News