திருவள்ளூரில் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்

திருவள்ளூர் , ஊத்துக்கோட்டை வட்டங்களில் உள்ள தனியார் பள்ளிகளின் வேன், பஸ் உள்பட 219 வாகனங்களை ஆய்வு செய்தார்

Update: 2023-05-21 01:45 GMT

திருவள்ளூர் , ஊத்துக்கோட்டை வட்டங்களில் உள்ள தனியார் பள்ளிகளின் வேன், பஸ் உள்பட 219 வாகனங்களை ஆட்சியர் ஆய்வு செய்தார்

திருவள்ளூர் மாவட்டத்தில் ஆய்வுக்கு உட்படுத்தாத பள்ளி வாகனங்கள் மற்றும் வேகமாக இயக்கும் வாகனங்கள் குறித்த புகார் வந்தால் உரிமம் ரத்து செய்யப்படும் என மாவட்ட கலெக்டர் ஆல் பி ஜான் வெர்கிஸ் தெரிவித்தார்.

பள்ளி மாணவ, மாணவிகளின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யும் வகையில், தனியார் பள்ளி வாகனங்களில் பாதுகாப்பு அம்சங்கள் சரியாக உள்ளனவா என்பது குறித்த ஆய்வு பள்ளி விடுமுறை காலங்களில் ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது.

அதன்படி திருவள்ளூர் வட்டம் மற்றும் ஊத்துக்கோட்டை வட்டத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் உள்ள வேன், பஸ் உள்ளிட்ட 219 வாகனங்களுக்கு உரிமம் உள்ளதா?, ஓட்டுனர் மற்றும் உதவியாளர்கள் உரிமம் பெற்றுள்ளார்களா? மற்றும் வாகனங்கள் மாணவர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் உள்ளதை என்பன போன்ற  முக்கிய அம்சங்கள் குறித்து முதல் கட்டமாக திருவள்ளூர் வட்டாரப் போக்குவரத்து எல்லைக்குட்பட்ட 70 வாகனங்கள் திருவள்ளூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் ஆய்வு நடைபெற்றது. 

இதில் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் ஆய்வு மேற்கொண்டார். பள்ளி வாகனங்களின் முதலுதவிப் பெட்டி, வேகக் கட்டுப்பாட்டுக் கருவி பொருத்துதல், அவசரகாலக் கதவு, ஜன்னல்கள், தீயணைப்புக் கருவிகள், புத்தகப் பை வைக்கும் அடுக்கு உள்பட 16 அம்சங்கள் குறித்து ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் ஆட்சியர் கூறியதாவது:  பள்ளி பேருந்துகளில் கூடுதல் மாணவர்களை ஏற்றிச் செல்வது, பாதுகாப்பு இல்லாமல் வாகனத்தை அதிவேகமாக ஓட்டுவது போன்ற காரணங்கள் கண்டறியப்பட்டால் வாகனங்களின் உரிமைகளை ரத்து செய்யப்படும். பேருந்துகளில் சிசிடிவி கண்காணிப்பு காமெரா வைக்க வேண்டும் என்பதை கட்டாயப்படுத்துவோம்.  குழந்தைகள் பாதுகாப்பு விஷயத்தில் எந்த ஒரு சமாதானமும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது  தனியார் பள்ளிகளில் கழிவறையை தூய்மையாக பராமரிக்கவில்லை என்ற புகார்  வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் ஆட்சியர்.

இதைத் தொடர்ந்து வாகனங்களை சிறப்புக் கூட்டு தணிக்கைக்கு உட்படுத்தி கூட்டாய்வு செய்யும் நிகழ்வில் தீயணைப்பான் கருவிகளை முறையாக கையாளுவது குறித்து வாகன ஓட்டுனர்களுகளிடையே விழிப்புணர்வு ஏற்படும் வகையில் தீயணைப்பு துறை சார்பாக அளிக்கப்பட்ட செய்முறை பயிற்சியை மாவட்ட ஆட்சித் தலைவர்பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதில்,  மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அரிக்குமார், முதன்மை கல்வி அலுவலர் .கோ.சரஸ்வதி, வருவாய் கோட்டாட்சியர் (திருவள்ளூர்) ஜெயராஜ் பௌலின், வட்டாரப் போக்குவரத்து அலுவலர் வி.கிரிராஜன், மோட்டார் வாகன ஆய்வாளர் மோகன், சுரேஷ் குமார் தீயணைப்பு துறை மாவட்ட கூடுதல் அலுவலர் .எஸ்.வில்சன் ராஜ்குமார், மாவட்ட கல்வி அலுவலர் தேன்மொழி, மருத்துவக் குழுவினர், தீயணைப்புத் துறையினர் உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.


Tags:    

Similar News