திருவள்ளூரில் விநாயகர் சிலைகள் கரைப்பு

காக்களூர் ஏரியில் திருவள்ளூரில் இருந்து 111 விநாயகர் சிலைகள கரைக்கப்பட்டது.

Update: 2023-09-22 05:15 GMT

திருவள்ளூரில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் 111,விநாயகர் சிலைகளை ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு காக்களூர் ஏரியில் கரைக்கப்பட்டன.

திருவள்ளூரில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் 111,விநாயகர் சிலைகளை ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு காக்களூர் ஏரியில் கரைக்கப்பட்டன.

திருவள்ளூர் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தியையொட்டி, விநாயகர் சிலைகள் வைப்பதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் மாவட்ட நிர்வாகம் சார்பில் விதிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த ஆண்டை விட இந்த ஆண்டில் இந்து முன்னணி, விஸ்வ ஹிந்து பரிஷத், இந்து மக்கள் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் சார்பில் திருவள்ளூரில் 111.இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து பல்வேறு பகுதிகளில் இருந்து விநாயகர் சிலைகளை திருவள்ளூர் அடுத்த ஆயில் மில் பகுதியில் வரவைக்கப்பட்டு அங்கிருந்து டிராக்டர் போன்ற வாகனங்களில் விநாயகர் சிலைகளை, மாவட்ட நிர்வாகம் குறிப்பிட்ட வழித்தடங்களில் விதி முறைகளின் படி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஜே.என்.சாலை, பேருந்து நிலையம், வீரராகவர் கோயில் தேரடி, குளக்கரைச் சாலை, பஜார் வீதி, காக்களூர் சாலை வழியாக மேளதாளம் முழங்க, பக்தர்கள் ஆடல், பக்திப் பாடல்களுடன் காக்களூர் ஏரியில் கொண்டுவரப்பட்டு தண்ணீரில் கரைக்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில் அதிமுக திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பி.வி.ரமணா, நகர செயலாளர் கந்தசாமி, பாமகவை சேர்ந்த பால யோகி, வெங்கடேசன், இ.தினேஷ்குமார் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் ஊர்வலத்தில் பங்கேற்றனர்.




Tags:    

Similar News