பழங்கால ராக்கெட் லாஞ்சர் குண்டு கண்டெடுப்பு
பெரியபாளையம் அருகே பழங்கால ராக்கெட் லாஞ்சர் குண்டு கண்டெடுப்பு போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
பெரியபாளையம் அருகே பழங்கால ராக்கெட் லாஞ்சர் குண்டு கண்டெடுப்பு போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அடுத்த மெய்யூர் காப்புக்காடு பகுதியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த சிலர் பூமியில் பழங்கால ராக்கெட் குண்டு போன்று பொருள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து இது குறித்து பெரியபாளையம் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பெரியபாளையம் போலீஸார் ராக்கெட் லாஞ்சர் குண்டினை சுற்றி மணல் மூட்டைகளை அடுக்கி வைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
மேலும் சென்னையில் இருந்து மருதம் வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அதன் தன்மையை குறித்து ஆய்வு செய்யப்படும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதேபோன்று கடந்த இரண்டு ஆண்டுகளாக பூண்டி ஒன்றியத்துக்குட்பட்ட ராமநாதபுரம், மாலந்தூர், ஆவாஜிபேட்டை, கிராமத்தில் சுமார் 2 அடி உயரம் கொண்ட பழங்கால ராக்கெட் லாஞ்சர் குண்டுகள் கண்டெடுத்தனர்.
மருதம் குழுவினர் அத்தகைய ராக்கெட் லாஞ்சர் குண்டுகளை திருவள்ளூர் அடுத்த அதிகத்தூர் பகுதியில் உள்ள தனியார் துப்பாக்கி தொழிற்சாலையில் பாதுகாப்பாக வைத்திருந்தனர்.அதன் பின் அத்தகைய குண்டுகளை ஆர்.கே.பேட்டை அடுத்த ஆந்திரா மாநிலம் ஒட்டியுள்ள தமிழக எல்லையான தேகாபுரம் கிராமப் பகுதியில் உள்ள மலையடிவாரத்தில் வைத்து செயலிழப்பு செய்தது குறிப்பிடத்தக்கது.கடந்த 1940.ஆம் ஆண்டு மெய்யூர் காட்டுப்பகுதியில் ஆங்கிலேயர்கள் போர் பயிற்சி மேற்கொண்ட போது அத்தகைய குண்டுகள் பல்வேறு இடங்களில் பூமியில் சிதறுண்டு மறைந்திருப்பதால் அப்பகுதி மக்கள் தகவல் தெரிவிக்கின்றன.பூண்டி சுற்றுவட்டார பகுதியில் அடுத்தடுத்து பீரங்கி குண்டுகள் கண்டெடுக்கப் பட்டு வருவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.