வழிதவறி ஊருக்குள் புகுந்த மான்... வனத்துறையினரிடம் ஒப்படைப்பு

திருவள்ளூர் அருகே, காப்புக் காட்டில் இருந்து உணவைத்தேடி ஊருக்குள் வழிதவறி வந்த மானை பிடித்து, பொதுமக்கள் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

Update: 2021-04-27 13:19 GMT

கோடைவெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் காப்புக்காடு பகுதியில் இருந்து வனவிலங்குகள் கிராமத்திற்குள் தண்ணீர் தேடி வருவது வாடிக்கையாகி உள்ளது. திருவள்ளூர் அடுத்த புல்லரம்பாக்கம் கிராமத்தில், கடந்த சில நாட்களுக்கு முன்பாக மான் ஒன்று, ஊருக்குள் சுற்றி திரிவதை பொதுமக்கள் பார்த்து, வனத்துறை அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், இன்று காலை புல்லரம்பாக்கம் நாகாத்தம்மன் கோவில் அருகே, மோகன் என்பவரது வீட்டில் ஆட்கள் யாரும் இல்லாத  நேரத்தில் உள்ளே சென்ற மான், சமையலறையில் இருந்த உணவை சாப்பிட்டுக் கொண்டிருந்ததை பார்த்து, மோகன் அருகில் உள்ள பொதுமக்களை அழைத்து சுற்றி வளைத்து மானை பிடித்துள்ளனர்.

பின்னர், இதுகுறித்து புல்லரம்பாக்கம் காவல் துறையினர் மற்றும் பூண்டி வனத்துறை அதிகாரிகளுக்கு கொடுத்தார். தகவல் அறிந்து வனத்துறை அதிகாரி இமானுவேல் தலைமையிலான குழுவினர், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, பொதுமக்களிடம் பிடிப்பட்ட மானை பத்திரமாக மீட்டு , புல்லரம்பாக்கம் காப்புக்காடு வனத்துறை பகுதியில் விட்டனர்.

மான்களுக்கு உணவு, தண்ணீர் போன்ற வசதிகளை காட்டுக்குள் குட்டைகளை அமைத்துள்ளதாகவும், ஆனாலும் ஒருசில மான்கள் வழிதவறி இதுபோன்று ஊருக்கு சென்று விடுவதாகவும், வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News