திருவள்ளூரில் நலத்திட்ட உதவிகளை பால்வளத் துறை அமைச்சர் ஆவடி சா.மு. நாசர் வழங்கல்
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பாக நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன
தமிழ்நாடு முதல்வர் தமிழ்நாட்டில் பொற்கால ஆட்சி நடத்தி வருகிறார் திருவள்ளூரில் அமைச்சர் ஆவடி சாமு.நாசர் தெரிவித்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க, திருவள்ளுர் தனியார் திருமண மண்டபத்தில் தமிழக அரசின் இரண்டாண்டு சாதனைகளை எடுத்துரைக்கும் வகையிலும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பாக நலத்திட்ட உதவிகள் வழங்கும் வகையிலும் நடைபெற்ற விழாவில் 495 பயனாளிகளுக்கு ரூ1.84 கோடி மதிப்பீட்டிலான இலவச வீட்டு மனை பட்டாக்கள் மற்றும் 100 பயனாளிகளுக்கு ரூபாய் ஒரு லட்சம் மதிப்பீட்டிலான முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு உதவித்தொகைகள் பெறுவதற்கான ஆணைகள் என மொத்தம் 595 பயனாளிகளுக்கு ரூ1.85 கோடி மதிப்பீட்டிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கு நிகழ்ச்சி நடைபெற்றது
மாவட்ட ஆட்சித் தலைவர் ஆல்பி ஜான் வர்கீஸ் வரவேற்புரையாற்றினார். சட்டமன்ற உறுப்பினர்கள் திருத்தணி எஸ்.சந்திரன், விஜி.ராஜேந்திரன், டி.ஜெ.கோவிந்தராஜன், ஆ.கிருஷ்ணசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சாமு நாசர் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசியதாவது: தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இரண்டு ஆண்டு காலமாக சொன்னதையும், சொல்லாததையும் தன்னை அர்ப்பணித்துக்கொண்டு இந்நாட்டு மக்களுக்காக நல்லதொரு திட்டங்களை; அறிமுகப்படுத்தி இன்றைய தினம் நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார். மே 7-ம் தேதி இரண்டாம் ஆண்டு முடிந்து மூன்றாம் ஆண்டு அடியெடுத்து வைக்கிறோம்.
தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின் பேரில் உடனடியாக மாவட்ட ஆட்சித் தலைவர் இந்த நலத்திட்ட உதவிகளை வழங்க குறுகிய காலத்தில் ஏற்பாடு செய்தார். இந்த நலத்திட்ட உதவிகள் பழங்குடியின மக்களுக்கும், வயதானவர்களுக்கும், ஆதரவற்ற விதவைகளுக்கும் பல்வேறு நலத்திட்ட உதவிகளாக பட்டா வழங்குதல், முதியோர்களுக்கு உதவித்தொகை வழஙகுதல் என மூன்றாம் ஆண்டு அடியெடு;த்து வைக்கும் முதல் கட்ட நிகழ்ச்சியாக இந்த பட்டா வழங்கும் நிகழ்ச்சியை தமிழகத்திலேயே முதன்மையாக நம் திருவள்ளுர் மாவட்ட ஆட்சித் தலைவர் உடனடியாக ஏற்பாடு செய்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உத்தரவு பிறப்பித்த கட்டளைகளையெல்லாம் அந்த அளவிற்கு சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் ஆகியோர்கள் நடைமுறைப்படுத்தி வருகிறார்கள். கடந்த ஆட்சியில் நிதி நிலை அறிக்கையில் ரூ.62,000 கோடி நிதிசுமை வைத்து சென்றனர். ஆனால், தற்பொழுது மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ரூ.32,000 கோடியாக குறைத்து, இந்த ஆண்டு ரூ.30,000 கோடியாக வைத்த பெருமைதமிழ்நாடு முதலமைச்சரையே சாரும்.
அடுத்த ஆண்டு இன்னும் நிதி நிலை சுமை குறையும். தமிழ்நாடு முதலமைச்ச பள்ளி மாணவர்களின் கால தாமத வருகையை ஆய்வு செய்து ஒவ்வொரு நல்ல திட்டமான பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு சிற்றுண்டி திட்டம் என தமிழகம் முழுவதும் 18 இலட்சம் மாணவச் செல்வங்களுக்கு ஏறக்குறைய ரூ.500 கோடி முதலீட்டில் ஏற்பாடு செய்துள்ளார்கள். இத்திட்டத்தின் மூலம் 60 சதவிகிதம் மாணவச் செல்வங்கள் பள்ளிக்கு கல்வியறிவு பெறுவதற்கு கால தாமத வருகையாக இருந்தனர். ஆனால், காலை சிற்றுண்டி உணவு அறிமுகப்படுத்தியதிலிருந்து மாணவச் செல்வங்கள் தற்பொழுது 80-85 சதவிகிதம் பள்ளி ஆரம்பிக்கும் முன்பே வருகை புரிகின்றனர். இந்த திட்டம் இந்தியாவில் எந்த முதல்வருக்கும் ஏற்படாத ஒரு புதிய யோசனையாகும்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பள்ளி கல்வித்துறைக்கு கடந்த நிதிநிலை அறிக்கையில் ரூ.28 கோடி அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு ரூ.43 கோடி பள்ளி கல்வித்துறைக்கு ஒதுக்கியுள்ளார்கள். அதே போன்று 19,000 கோடி உயர் கல்விக்கு ஒதுக்கியுள்ளார்கள். இலங்கை தமிழ் மக்களுக்கு வீட்டு வசதிக்காகவும், தேவையான ரேஷன் பொருட்களுக்காகவும் ரூ.325 கோடி ஒதுக்கியுள்ளார்.
நிதி பற்றாக்குறை இருந்த போதிலும் தமிழ்நாட்டின் மான்செஸ்டர் என அழைக்கப்படும் கோயம்புத்தூருக்கும் நிதி ஒதுக்கினார். பூவிருந்தவல்லிக்கும் ரூ.2000 கோடி நிதி ஒதுக்கியுள்ளார்கள். அந்த அளவிற்கு தமிழ்நாடு முதலமைச்சர் தமிழ்நாட்டு மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை அறிவித்து, வழங்கி வருகிறார். மேலும், தமிழ்நாட்டில் பொற்கால ஆட்சி நடத்தி வருகிறார். தமிழ்நாடு முதலமைச்சர் இந்த நிகழ்ச்சியை குறுகிய காலத்தில் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்த மாவட்ட ஆட்சித் தலைவர் உள்ளிட்ட அனைத்து துறை அரசு அலுவலர்களுக்கு வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் பால்வளத்துறை அமைச்சர் சா.மு. நாசர்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் கே.வி.ஜி.உமா மகேஸ்வரி, மாவட்ட வருவாய் அலுவலர் அசோகன், சமூக பாதுகாப்பு திட்டம் தனித்துணை ஆட்சியர் சி.ப.மதுசூதனன், நகர மன்ற தலைவர் உதயமலர்பாண்டியன், துணைத் தலைவர் சி.சு.ரவிச்சந்திரன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் காயத்ரி சுப்பிரமணியம், வருவாய் கோட்டாட்சியர் (திருவள்ளுர்) .ஜெயராஜ் பௌலின், திருவள்ளூர் வட்டாட்சியர் மதியழகன் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் பொதுமக்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.