மாணவ மாணவிகளுக்கு சைக்கிள் பந்தயம்

திருவள்ளூரில் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு மாணவ மாணவிகளுக்கான சைக்கிள் போட்டிகள் நடைபெற்றது.

Update: 2023-10-15 06:15 GMT

அண்ணா பிறந்தநாளையொட்டி நடைபெற்ற சைக்கிள் போட்டியில் பங்கேற்ற மாணவர்கள்

அறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு 650 மாணவ, மாணவிகள் சைக்கிள் பந்தயம் நடைபெற்றது..

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் திருவள்ளூர் மாவட்ட பிரிவின் சார்பாக பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு மாணவ, மாணவிகளுக்கு சைக்கிள் போட்டி நடைபெற்றது.

நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட கூடுதல் ஆட்சியர் சுப புத்திரா கலந்து கொண்டு கொடி அசைத்து சைக்கிள் போட்டியை தொடக்கி வைத்தார், மேலும் இப்போட்டி மூன்று பிரிவுகளாக 17.வயதுக்கு உட்பட்டவர்கள்,15 வயதிற்கு உட்பட்டவர்கள் மேலும் 13.வயதிற்கு உட்பட்டவர்கள் என ஆண், பெண் இருபாலருக்கும் நடைபெற்றது. இந்த போட்டிகளானது

திருவள்ளூர் மருத்துவ கல்லூரி அருகே தொடங்கப்பட்டு பூண்டி பேருந்து நிலையம் சென்று அங்கு இருந்து மீண்டும் மாவட்ட விளையாட்டரங்கம் ந்தடைந்தன, இந்த போட்டியானது,17 வயது உள்ளவர்களுக்கு 20.கிலோ மீட்டர் தூரமும்,15. வயது உள்ளவருக்கு15 கிலோமீட்டர் தூரமும்,13 வயது உள்ளவர்களுக்கு10 கிலோ மீட்டர் என இந்த சைக்கிள் பந்தயம் நடைபெற்றது.

இதில் மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் அனுமந்தன்,மற்றும் மாவட்ட விளையாட்டு அலுவலர் பிரேம்குமார், நகர மன்ற தலைவர் உதய மலர் பொன் பாண்டியன் ஆகியோர் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.




Tags:    

Similar News