1.லட்சம் கட்டினால் 4 லட்சம்..! 87 கோடி ரூபாய் மோசடி..!

திருவள்ளூர் அருகே 1 லட்சம் கட்டினால் 4 லட்சம் தரப்படும் என ஆசை வார்த்தை கூறி 87 கோடி ரூபாய் மோசடி செய்த ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் மீது எஸ்பியிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Update: 2024-07-02 12:00 GMT

எஸ்பியிடம் புகார் அளிக்க வந்த பொதுமக்கள்.

ரூ.1 லட்சம் கட்டினால் 4 லட்சம் தருவதாக ஆசை வார்த்தை கூறி திருவள்ளூர் மாவட்டத்தில் 1930 பேரிடம்87 கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்ட ஓய்வு பெற்ற ஆசிரியர் மற்றும் அவரது குடும்பத்தார் மீது பாதிக்கப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் திருவள்ளூர் மாவட்ட எஸ்பி இடம் புகார் அளித்துள்ளனர்.

சென்னையில் ஸ்வர்ணதாரா குழுமம் என்ற பெயரில் பிரபல நிதி நிறுவனம் கடந்த 2015 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட நிலையில் பல்வேறு மாவட்டங்களில் மக்களிடத்தில் கவர்ச்சிகரமான விளம்பரத்தை கொண்டு சென்று  பெரம்பலூர், சென்னை, அரியலூர், வேலூர் போன்ற பகுதியில் இருக்கும் பொதுமக்களிடமிருந்து சுவர்ணதாரா குரூப் ஆப் கம்பெனிக்கு முதலீடுகளைப் பெறுவதற்கு நிர்வாகிகளை நியமித்தனர்.  அதில் பாண்டுரங்கன், பிசினஸ் அசோசியேட் மற்றும் இவர் குடும்பத்தார் அனைவரும் புரோக்கர்களாக செயல்பட்டு 1930 பேரிடம் இருந்து  87 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகின்றது.

அதன் தொடர்ச்சியாக திருவள்ளூர் மாவட்டத்தில் 2019 ஆம் ஆண்டு முதல் ஸ்வர்ணதாரா நிறுவனத்திற்கு திருவள்ளூரை சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் பாண்டுரங்கன்,2019 முதல் 2021 வரை 3 ஆண்டுகள் அறிவித்தபடி பணத்தை திருப்பி செலுத்தியுள்ளனர். மூன்றாண்டுகளுக்குப் பிறகு வட்டிப் பணத்தை திருப்பி தராமல் அலைக்கழித்துள்ளனர்.

இது குறித்து பொதுமக்கள் பாண்டுரங்கனிடம் கேட்டபோது நீங்கள் செலுத்திய பணத்தை ஸ்வர்ணதாரா நிதி நிறுவனத்தில் செலுத்தியதாகவும் அவர்கள் தரவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.இந்நிலையில் ஸ்வர்ணதாரா நிதி மோசடி குறித்து சென்னை மத்திய குற்ற பிரிவு போலீசில் கடந்த மே மாதம் கொடுத்த புகாரின் பேரில் அந்த நிறுவனத்தின் இயக்குனர் வெங்கடரங்க குப்தா,அவரது  மனைவி கவிதா சக்தி, இயக்குனர்கள் ஹரிஹரன், விஜயஸ்ரீ குப்தா, அவர்களது மகள் பிரதீஷா குப்தா, ஜெய் சந்தோஷ், ஜெய் விக்னேஷ் ஆகிய ஏழு பேரை கைது செய்து புழல் சிறைச்சாலையில் அடைத்துள்ளனர்.

இந்நிலையில் திருவள்ளூரைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் பாண்டுரங்கனை நம்பி கிட்டத்தட்ட 25 பேர் ஏஜென்ட்டுகளாக செயல்பட்டு  1930 பேரிடமிருந்து 87 கோடி ரூபாய் வரை வசூல் செய்த பணத்தை தராமல் ஏமாற்றியதாக திருவள்ளூர் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தனர்.

ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் ,வியாபாரிகள் என 1930 பேரிடம் 87 கோடி ரூபாய் வரை மோசடியில் ஈடுபட்டசம்பவம் திருவள்ளூர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News