மின்சாரம் பாய்ந்து பசு மாடுகள் உயிரிழப்பு

செங்குன்றம் அருகே மேய்ச்சலுக்குச் சென்ற 4. பசுக்கள் அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்து பரிதாபமாக உயிரிழந்தன

Update: 2023-09-16 01:15 GMT

மின்சாரம் தாக்கி உயிரிழந்த பசு மாடுகள்

செங்குன்றத்தில் மின்சார கம்பி அறுந்து விழுந்த விபத்தில் நான்கு பசுக்கள் பரிதாபமாக பலி. மின்வாரிய அதிகாரிகளின் மெத்தனப் போக்கை காரணம் என குற்றச்சாட்டு.

திருவள்ளூர் மாவட்டம், செங்குன்றம் அடுத்த வடகரை பகுதியில் ஏராளமானோர் பசுக்களை வைத்து பால் வியாபாரம் செய்து வருகின்றனர். நேற்று மாலை பசுக்கள் மேய்ச்சலுக்காக அவிழ்த்து விடப்பட்டிருந்தன.

இந்நிலையில் இன்று காலை வடகரை பகுதியில் மின்சார கம்பி அறுந்து விழுந்து நான்கு பசுக்களும்  மின்சாரம் தாக்கி உயிரிழந்தது. இது குறித்து தகவல் அறிந்த செங்குன்றம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இது குறித்த பகுதி மக்கள்  தெரிவிக்கையில் வடகரை பல்வேறு பகுதிகளில் சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட மின் கம்பிகள் ஆங்காங்கே அறுந்து ஓட்டு போட்டு காணப்படுவதாகவும் இதனை மாற்றி அமைக்க பலமுறை மின்வாரிய அதிகாரிகளிடம் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

முறையான சீரமைப்பு பணிகளை மேற்கொள்ளாமல் மின்வாரிய அதிகாரிகள் அலட்சியப் போக்குடன் செயல்படுவதால் இது போன்ற விபத்துகள் நடைபெறுகின்றன. எனவே இதுபோன்று விபத்துகள் மீண்டும் நடைபெறாமல் நடவடிக்கை உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மின்சாரம் பாய்ந்து பசுக்கள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.





Tags:    

Similar News