நடிகை குஷ்பு மீது தமிழர் முன்னேற்ற படை தலைவர் வீரலட்சுமி புகார்
எக்ஸ் வலைதளத்தில் சேரி குறித்து பதிவிட்ட நடிகை குஷ்பு மீது தமிழர் முன்னேற்ற படை தலைவர் வீரலட்சுமி புகார் அளித்தார்.
நடிகை குஷ்பு மீது திருவள்ளூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தமிழர் முன்னேற்றப் படை தலைவர் வீரலட்சுமி புகார் அளித்தார்.
.பாஜக மாநில மகளிர் அணி நிர்வாகியும் திரைப்பட நடிகையுமான குஷ்பு வீட்டு அருகில் வசிக்கும் மக்களை சேரி மக்கள் என்று சேரி மொழி என்றும் எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழர் முன்னேற்றப் படை தலைவர் மற்றும் திருவள்ளூர் மாவட்ட நிர்வாகி ஜான்சாமுவேல் உள்ளிட்ட பலர் திருவள்ளூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பா.சிபாஸ் கல்யாணிடம் புகார் மனு அளித்தனர்.
தமிழ்மக்களை இழிவாகப் பேசிய குஷ்பு தமிழ் மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்கவேண்டும் . இல்லாவிட்டால் போராட்டம் நடத்துவோம் எனவும் வீரலட்சுமி எச்சரித்தார். மேலும் மும்பையிலிருந்து நடிக்க பிழைப்பு தேடி தமிழகத்திற்கு வந்துவிட்டு, தமிழ் கலாசாரத்தை கொச்சைப்படுத்தும் வகையில் திருமணத்திற்கு முன்பே உடலுறவு கொள்ளலாம் என்று பேசியது, விடுதலைப் புலிகளை தீவிரவாதிகள் என்று பேசியதற்கும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. எனவே இனி நாவடக்கத்துடன் குஷ்பு பேச வேண்டும் என்றும் இல்லையேல் போராட்டம் நடைபெறும் என்று எச்சரித்தார்.