பெரியபாளையத்தில் பேராசிரியர் அன்பழகன் நினைவு நாள் அனுசரிப்பு
பெரியபாளையத்தில் பேராசிரியர் அன்பழகன் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. அவரது திருவுருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.
மறைந்த திமுக முன்னாள் பொதுச்செயலாளர் க. அன்பழகன் நினைவு நாளை முன்னிட்டு தமிழகம் எங்கும் திமுக.வினர் அவரது புகைப்படத்துக்கு மலர் தூவி மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.
இதில் ஒரு பகுதியாக திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் மறைந்த திமுக முன்னாள் பொதுச்செயலாளர் பேராசிரியர் க அன்பழகன் மூன்றாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு பெரியபாளையம் பேருந்து நிலையம் அருகே வைக்கப்பட்ட அவரது படத்திற்கு தலைமைச் செயற்குழு உறுப்பினரும் எல்லாபுரம் வடக்கு ஒன்றிய செயலாளர் பிஜே.மூர்த்தி தலைமையில் மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
இதில் பொதுக்குழு உறுப்பினர் ஏவி. ராமமூர்த்தி, மாவட்ட பிரதிநிதி விபி. ரவிக்குமார், மாவட்ட கவுன்சிலர் சித்ரா முனுசாமி, மாவட்ட வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் வழக்கறிஞர் சீனிவாசன், மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் தனசேகரன், ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் வடமதுரை அப்புன், நிர்வாகிகள் இ ராஜா, பார்த்திபன், ஏனம்பாக்கம் சம்பத், காக்க வாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் சுமன, கார்த்திக், வேலு ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.