பொன்னேரி சுற்று வட்டார பகுதி நீர் நிலைகளில் ஆட்சியர் ஆய்வு

பொன்னேரி சுற்று வட்டார பகுதிகளில் உள்ள நீர் நிலைகளை திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் நேரில் ஆய்வு செய்தார்.

Update: 2023-11-05 07:15 GMT

நீர்நிலைகளை பார்வையிட்ட ஆட்சியர்.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி சுற்றுவட்டார இடங்களில் உள்ள நீர்நிலைகளை மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

வடகிழக்கு பருவ மழை துவங்கி நிலையில், மாவட்டத்தில் உள்ள நீர்தேக்கங்கள், நீர்நிலை பகுதிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். பொன்னேரி சுற்றுப்பகுதிகளில் ஆரணியாறு மற்றும் கொசஸ்தலை ஆற்றின் கரையோர பகுதிகளை பார்வையிட்டார்.

கடந்த காலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டபோது கரை உடைப்பு ஏற்பட்ட பகுதிகளான பெரும்பேடு, ரெட்டிப்பாளையம், தத்தமஞ்சி ஆகிய கிராமங்களில் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள புனரமைப்பு பணிகள் குறித்து நேரில் பார்வையிட்டு அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

நகர்ப்புற பகுதிகள், ஆற்றுக்கரையோர பகுதிகள் என, மாவட்டம் முழுவதும் 133 இடங்கள் மழையால் பாதிக்கப்படும் பகுதிகள் என கண்டயறிப்பட்டு, அங்கு வெள்ள பாதுகாப்பு முகாம்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை தொடர்பாக அனைத்து துறை அதிகாரிகளுடன் தொடர் ஆய்வு மேற்கொண்டு வருவதாகவும், எவ்வித பேரிடர் வந்தாலும் அதனை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில் உள்ளதாக மாவட்ட ஆட்சியர் அப்போது தெரிவித்தார்.


Tags:    

Similar News