உலக நன்மை வேண்டி சத்ரு சம்ஹார ஹோமம்

உலக மக்கள் நன்மை வேண்டி இந்து மக்கள் கட்சி சார்பில் 27 அடி வேலுக்கு சிறப்பு வழிபாடு செய்தனர்.

Update: 2023-10-11 09:30 GMT

பெரியபாளையம் அருகே உலக மக்கள் நன்மை வேண்டி 27 அடி உயர வேலுக்கு சத்ருசம்கார ஹோமம்,

பெரியபாளையம் அருகே உலக மக்கள் நன்மை வேண்டி 27 அடி உயர வேலுக்கு சத்ருசம்ஹார ஹோமம், பாலeபிஷேகம் நடைபெற்றது.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தொகுதி சோழவரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட சின்னம்பேடு கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு பாலசுப்பிரமணி சுவாமி திருக்கோயிலுக்கு செல்லும் வழியில் உள்ள 27 அடி உயரம் இந்து மக்கள் கட்சியின் முயற்சியால் வைக்கப்பட்டுள்ள வேலுக்கு திருவள்ளூர் மாவட்ட நிர்வாகிகள் ஏற்பாட்டில் உலக மக்கள் நன்மை வேண்டி சத்ருசம்ஹார ஹோமம் மற்றும் பாலாபிஷேகம்  நடைபெற்றது.

திருவள்ளூர் மாவட்ட தலைவர் சூரப்பட்டு மோகன்ஜி முன்னிலை வகித்தார். நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக இந்து மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் அர்ஜுன் சம்பத் தலைமை  வகித்து நிகழ்ச்சியை தொடக்கி வைத்தார்.

பின்னர் நிகழ்ச்சியில் கணபதி பூஜை மற்றும் கல பூஜையுடன் பட்டாச்சாரியர்கள் வேத மந்திரங்கள் முழங்க மேளதாளத்துடன் உலக மக்கள் நன்மை வேண்டி சத்ருசம்கார ஹோமம் மற்றும் 27 அடி உயர வேலுக்கு பாலபிஷேகம் செய்யப்பட்டு தூப தீப ஆராதனை காண்பிக் கப்பட்டது.

இதில், தெய்வீக பேரவை மாநில தலைவர் சிவஸ்ரீ கார்த்திக், மாநில அமைப்பு பொதுசெயலாளர் அரசுகுமார் , மாநில வழக்கறிஞர் வைகுண்ட கோபாலகிருஷ்ணன், மாவட்ட செயலாளர் செ. வசந்தகுமார், மாவட்ட இளைஞரணி பொது செயலாளர் அசோக் , கும்மிடிப்பூண்டி தொகுதி தலைவர் துளசிராம் , மாதவரம் பகுதி பொறுப்பாளர் சக்தி , சிறுவாபுரி பகுதி தலைவர் பழனி , இந்து ஆதரவாளர்கள் கும்மிடிப்பூண்டி தொகுதி வெங்கடேஷ்  , மாரிமுத்து , அஜித் , சுப்பிரமணி , மாவட்ட தெய்வீக பேரவை அமைப்பாளர் குமார் உள்ளிட்ட சுற்று வட்டார பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர் அதை தொடர்ந்து பக்தர்களுக்கு அறுசுவை அன்னதானம் வழங்கினர்.





Tags:    

Similar News