பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் அறிமுகக் கூட்டம்..!
திருவள்ளூரில் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் அறிமுகக் கூட்டம் நடந்தது
வாக்கு இயந்திரத்தால் மட்டுமே பாஜக வெற்றி பெறுகிறது. அமலாக்கத்துறை, சிபிஐ, தேர்தல் ஆணையம், நீதிமன்றங்கள் உள்ளிட்ட அனைத்தும் பிஜேபி கட்டுப்பாட்டில் உள்ளது. தேர்தல் அறிக்கை என்பதே மக்களை ஏமாற்றும் செயல். மக்களை கையேந்தும் நிலைக்கு உருவாக்குவதே தேர்தல் அறிக்கை எனவும் சாடல். செங்குன்றத்தில் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் பேட்டி.
திருவள்ளூர் மாவட்டம், செங்குன்றத்தில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு பகுஜன் சமாஜ் கட்சியின் இறுதி வேட்பாளர் பட்டியல் அறிவிப்பும், திருவள்ளூர் பாராளுமன்ற வேட்பாளர் அறிமுகக் கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங், பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் மேல் சபை எம்பியுமான அசோக் சித்தார்த் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு திருவள்ளூர் பாராளுமன்ற வேட்பாளர் மகிழ்மதியை கட்சியினர் மத்தியில் அறிமுகம் செய்து வைத்தனர்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் திமுக தேர்தல் அறிக்கை குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர்,
தேர்தல் அறிக்கை என்பதே மக்களை ஏமாற்றும் செயல் என சாடினார். மக்களை கையேந்தும் நிலைக்கு கொண்டு செல்வதே தேர்தல் அறிக்கை என்றார்.2கோடி பேருக்கு வேலை வாய்ப்பு கொடுப்பதாக பிஜேபி கூறிய நிலையில் 80000பேர் பிஎஸ்என்எல்லில் இருந்து வேலை இழந்துள்ளதாக தெரிவித்தார். தமிழ்நாடு அரசில் பெரும்பாலான துறைகள் தனியார் மாயமாகி உள்ளதாக சாடினார். இந்தியாவில் ஒட்டுமொத்தமாக 60பேர் மட்டுமே தொழிலதிபராக இருப்பதாக சாடினார்.
தேர்தல் அறிக்கையை இல்லாமலே மக்களுக்கு அடிப்படை அத்தியாவசிய தேவைகளை செய்து தர வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு பகுஜன் சமாஜ் கட்சி தமிழ்நாட்டில் செயல்பட்டு வருவதாகவும் எங்களுக்கு தேர்தல் அறிக்கை எல்லாம் கிடையாது என பதில் அளித்தார். அதிமுக கூட்டணியில் புரட்சி பாரதம் கட்சிக்கு சீட்டு ஒதுக்கப்படாதது குறித்த கேள்விக்கு பதில் அளித்தவர் அது அவர்களுடைய பிரச்சனை அதைப்பற்றி எல்லாம் எனக்கு தெரியாது என பதில் அளித்தார்.
காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்குகள் இந்த தேர்தலில் முடக்கப்பட்டுள்ளது குறித்த கேள்விக்கு பதில் அளித்தவர் அதே காங்கிரஸ் கட்சி மத்தியில் ஆட்சி அதிகாரத்தில் இருந்து அந்த அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி மற்ற கட்சிகளை மிரட்டியது போன்று அவர்களுடைய வங்கி கணக்குகளை முடக்கியது போன்றும் அதே செயலில் தான் இன்று பாரதிய ஜனதா கட்சி தனது பங்கிற்கு அதனை செயல்படுத்தி வருகிறது என்றும் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் இல்லை என குறிப்பிட்டு பேசினார்.
அமலாக்கத்துறை, சிபிஐ, தேர்தல் ஆணையம், நீதிமன்றங்கள் உள்ளிட்ட அனைத்தும் பிஜேபி கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், பாஜக என்ன வேண்டுமானாலும் செய்ய தயாராக இருப்பதாகவும், அதிலும் பாஜக, ஆர்எஸ்எஸ் தமிழ்நாட்டில் அதிக கவனம் செலுத்தி வருவதாக தெரிவித்தார். 100ஆண்டுகளாக பிராமணர் அல்லாதவர்கள் இயக்கங்கள் வரலாறு உள்ளது எனவும், அதிலும் திராவிட கட்சிகளை எப்படி அழிப்பது என்பதற்காக 5முறை வந்து விட்டார் எனவும், தேர்தலை எப்படி கையாளப்போகிறார்கள் என தெரிவித்தார்.
வாக்கு இயந்திரத்தை வைத்தே பாஜக வெல்வதாகவும் குற்றம் சாட்டினார். இந்தியாவில் ஜனநாயகம் என்பது ஆபத்தாக உள்ளதாக கூறினார். அதிமுக வாக்குகளை வாங்குவதாக பாஜக காட்டுவதற்கு முயற்சித்து வருவதாகவும் குற்றம் சாட்டினார்.