வீட்டின் கதவின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை
திருவள்ளூர் அருகே தனியார் தொலைக்காட்சி ஊழியர் வீட்டில் பூட்டை உடைத்து நகை பணம் கொள்ளை போனது தொடர்பாக போலீசார் விசாரணை
திருவள்ளூர் அருகே தனியார் தொலைக்காட்சி ஊழியர் வீட்டில் கதவின் பூட்டை உடைத்து நகை பணம் கொள்ளை போலீசார் விசாரணை.
திருவள்ளூர் மாவட்டம் வேப்பம்பட்டு ராமகிருஷ்ணா தெருவில் வசித்து வருபவர் சண்முகம், இவர் தனியார் தொலைக்காட்சியில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவர்கள் கோடை விடுமுறை கழிக்க அவரது சொந்த ஊரான திருநெல்வேலி மாவட்டத்தில் உறவினர் வீட்டில் இவர்களது குழந்தைகளை விட்டு வந்துள்ளார்.
இந்த நிலையில், குழந்தைகள் அழைத்து வருவதற்காக நேற்று முன்தினம் இரவு சண்முகம் மற்றும் அவரது மனைவி திருநெல்வேலி மாவட்டத்திற்கு புறப்பட்டு சென்றனர். சம்பவத்தன்று காலையில் அவரது வீட்டின் கதவு பூட்டை உடைக்கப்பட்டுள்ளதாக அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் ஊருக்குச் சென்ற சண்முகத்திற்கு அலைபேசியில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தார்.
இது குறித்து செவ்வாய்ப்பேட்டை போலீசாருக்கு அளித்த தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் விசாரணை செய்தனர். அப்போது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து வீட்டுக்குள் நுழைந்து பீரோவை உடைத்து அதில் இருந்த 5.லட்சம் மதிப்பிலான 12 பவுன் தங்க நகை மற்றும் குழந்தைகளுக்கு பள்ளிக்கூட பீஸ் கட்டுவதற்காகவும் குடியிருப்போர் நல சங்கத்தின் சந்தா பணம் ரூபாய் 1.25 லட்சம் ரொக்க பணமும் கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது.
இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து கைரேகை நிபுணர்களை வரவழைத்து தடயங்களை சேகரித்து பகுதியில் உள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர் இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.