மாத உதவித்தொகை வழங்க மாவட்ட ஆட்சியரிடம் பார்வையற்றோர் மனு..!

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரிடம், வழங்கப்படாமல் உள்ள 6 மாத உதவித் தொகையை வழங்க வேண்டும் என பார்வையற்றோர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

Update: 2024-02-21 04:15 GMT

கோப்பு படம் 

6 மாத காலமாக வழங்காமல் உள்ள மாத உதவி தொகை வழங்க வேண்டும் என கண் பார்வையற்றோர் மாற்றுத்திறனாளிகள் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் ஆவடி, பூந்தமல்லி, பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, திருவள்ளூர் ஆகிய பகுதியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட பார்வையற்றோர் மாற்றுத்திறனாளிகள் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் ஓடும் மின்சார ரயிலில் கடலை மிட்டாய், இஞ்சி மரப்பாய், பேனா, கதை புத்தகங்கள்,வியாபாரம் செய்து பிழைப்பை நடத்தி வருகின்றனர்.

பார்வையற்றோர் மாற்றுத்திறனாளிக்கு அரசு மாதந்தோறும் அளித்து வந்த 1500 ரூபாய் உதவித்தொகை கடந்த ஆறு மாதமாக நிறுத்தப்பட்டு இருப்பதால் தங்கள் வாழ்வாதாரம் மிகவும் கேள்விக்குறியாகி உள்ளதால் நிறுத்தப்பட்ட உதவித்தொகையை வழங்கிட கோரி பாதிக்கப்பட்ட கண் பார்வையற்றோர் மாற்றுத்திறனாளிகள் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வருகை தந்து ஆட்சியர் பிரபு சங்கரை சந்தித்து கோரிக்கை வைத்தனர்.

அப்போது அவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் தெரிவிக்கையில் கண்பார்வையில்லாமல் சிரமப்பட்டு வாழ்ந்து வரும் தங்களுக்கு விடியா திமுக அரசு உடனடியாக உதவி தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். அவர்களின் கோரிக்கை ஆட்சியர் பரிசீலனை செய்வதாக உத்தரவாதம் அளித்தார்.

Tags:    

Similar News