பெரியபாளையம் பகுதியில் சேட்டி லைட் நகரத்துக்கு நிலம் எடுப்பு: பாஜவினர் போராட முடிவு

பெரியபாளையம் பகுதியில் சேட்டிலைட் நகர உருவாகிறது இதற்கு கையகப்படுத்தும் நிலங்களை பாஜகவினர் பார்வை யிட்டனர்

Update: 2023-09-14 08:45 GMT

திருவள்ளூர் மாவட்டத்தில் சாட்டிலைட் நகரத்திற்கு விளை நிலம் கையகப்படுத்துவதை கண்டித்து ஆட்சியர்  அலுவலகத்தை முற்றுகையிட   பாஜகவினர்  தீர்மானித்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், வடமதுரை, ஏனம்பாக்கம், ஆவாஜிப்பேட்டை, கல்பட்டு உள்ளிட்ட 11 கிராமங்களை உள்ளடக்கிய பகுதியில் உள்ள சுமார் 1,702 ஏக்கர் பரப்பளவில் சாட்டிலைட் நகரத்தை உருவாக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது. இதனால், இப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களை கையகப்படுத்தினால் விவசாயம் பாதிக்கப்படும்.

விவசாயிகளின் வாழ்க்கைத் தரம் பாதிக்கப்படும். மேலும், விளை நிலங்களுக்கு மிகக் குறைந்த அளவு விலையை அரசு நிர்ணயம் செய்யும். மேலும்,11 கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலைச் சேர்ந்தவர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்படும். மேலும், இப்பகுதியில் காற்று, குடிநீர், சுற்றுச்சூழல் உள்ளிட்டவை மாசுபடும் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பி.ஜே.பி விவசாய அணி தலைவர் இ.ஆர்.எஸ்.சரத்குமார் தலைமையில், சாட்டிலைட் நகரம் அமைக்க உள்ள இடத்தை, தமிழக பாஜக விவசாய அணி மாநில பொதுச் செயலாளர் ரவிச்சந்திரன், மாநில துணைத்  தலைவர் வலசை முத்துராமன், மாநில செயலாளர் காளியப்பன் ஆகியோர் சாட்டிலைட் நகரத்திற்கு நிலம் கையகப்படுத்தும் கிராமங்களுக்கு சென்று விவசாய நிலங்களை பார்வையிட்டனர்.

இதன் பின்னர், பிஜேபி கட்சியின் கும்மிடிபூண்டி தொகுதி பொறுப்பாளரும், திருவள்ளூர் கிழக்கு மாவட்ட துணை தலைவருமான ஜே.ரவி இல்லத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அப்போது சாட்டிலைட் நகரம் அமைவதால் பாதிக்கப்படும் விவசாயிகளை ஒரு வார காலத்திற்குள் ஒருங்கிணைப்பது, திங்கட்கிழமை அனைத்து விவசாயிகளுடன் கட்சிக்கு அப்பாற்பட்டு திருவள்ளூரில் உள்ள ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கோரிக்கையை வலியுறுத்தி மனு அளிப்பது. இத்திட்டத்தை சீத்தஞ்சேரி சாலையில் உள்ள வனப்பகுதியில் மேற்கொள்ள வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், மாநில அரசு தொடர்பு பிரிவு தலைவர் அழிஞ்சிவாக்கம் எம்.பாஸ்கரன், மாநில திட்ட பொறுப்பாளர் எம்.முருகேசன், பொதுச் செயலாளர் எம்.நாகராஜ்,பொறுப்பாளர் எஸ்.சுந்தரம், ஓ.பி.சி அணி மாவட்ட நிர்வாகி சுப்பிரமணி, காஞ்சிபுரம் மாவட்ட விவசாய அணி தலைவர் பிரபாகரன், மாநிலச் செயலாளர் ராஜேஷ்குருசாமி, சென்னை கிழக்கு மாவட்ட விவசாய அணி சுந்தரலிங்கம், மாவட்ட தலைவர் மணிகண்டன்.

மாவட்ட பொதுச் செயலாளர் ஞானசேகர், துணைத்தலைவர் கமலக்கண்ணன்,மாநில செயற்குழு உறுப்பினர் ரகுநாதன், எல்லாபுரம் கிழக்கு ஒன்றிய தலைவர் பி.கே.முனுசாமி, மேற்கு ஒன்றிய தலைவர் எஸ்.ஜெகதீஸ்வரன், மாவட்ட செயற்குழு ஜெயப்பிரகாஷ், முன்னாள் மாவட்ட அமைப்பாளர் சுரேஷ், ஒன்றிய பொதுச்செயலாளர் சரவணன், பொறுப்பாளர் சிதம்பரலிங்கம், விவசாய அணி மாவட்ட செயலாளர் உமாதேவி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


Tags:    

Similar News