பெரியபாளையம் பவானி அம்மன் ஆலயத்தில் திருவிளக்கு பூஜை
ஆவணி பௌர்ணமி விழாவை முன்னிட்டு பெரியபாளையம் பவானி அம்மன் ஆலயத்தில் 108 பெண்கள் திருவிளக்கு பூஜை நடைபெற்றது
பிரசித்தி பெற்ற பெரியபாளையம் பவானி அம்மன் திருக்கோயிலில் ஆவனி மாதம் பௌர்ணமியை முன்னிட்டு 108 பெண்கள் பங்கேற்ற திருவிளக்கு பூஜை விமரfசையாக நடைபெற்றது.
திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பவானி அம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது.இக்கோவிலில் ஆடி மாதம் தொடர்ந்து 14 வாரம் திருவிழா வெகு விமரfசையாக நடைபெறும். விழாவை முன்னிட்டு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், விழுப்புரம், ராணிப்பேட்டை தமிழக மட்டுமல்லாவது.
ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி, தெலங்கானா, உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஆடி மாத திருவிழாவில் பெரியபாளையம் வந்து வாடகைக்கு விடுதிகளை எடுத்து தங்கி மொட்டை அடித்து, ஆலய வளாகத்தில் உள்ள பொங்கல் மண்டபத்தில் பொங்கல் வைக்கும், ஆடு, கோழி, என பலியிட்டு வேப்பஞ்சலை ஆடைகளை அணிந்து கையில் தேங்காயை ஏந்தி கோவில் சுற்றி வளம் வந்து நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.
இந்நிலையில் ஆவணி மாதம் பௌர்ணமி முன்னிட்டு உலக நன்மை வேண்டியும், பொதுமக்கள் நோய் இன்றிவாழவும் , ஆலயத்தின் சார்பில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
இதில்,108பெண்கள் பங்கேற்ற பூஜையில் கலந்து கொண்ட பெண்கள் குத்து விளக்கேற்றி குங்குமம், மஞ்சள், வண்ண மலர்களால் அர்ச்சனை செய்து அம்மனை வழிபட்டினர்.முன்னதாக மூலவருக்கு பால், தயிர்,பன்னீர், சந்தனம், ஜவ்வாது, தேன், பன்னீர், உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்கள் மூலம் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு. வண்ண மலர்களாலும், திரு ஆவணங்களால் அலங்கரிக்கப்பட்டு ஶ்ரீ பவானி அம்மனுக்கு மகா தீபாரதனை காண்பிக் கப்பட்டது.
இதனை தொடர்ந்து உற்சவர் வெள்ளி அலங்காரத்தில் கோயிலை மூன்று முறை சுற்றி உலா தேர்பவனியில் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் இவ்விழாவில் கலந்து கொண்ட பெண்களுக்கு மஞ்சள், குங்குமம, பிரசாதங்களும் வழங்கப்பட்டது.