திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு
ஆரூத்ரா நிதி நிறுவன மோசடிகளில் ஈடுபட்டதை குறித்து திருவள்ளூர் மாவட்டம் ஆட்சியரிடம் சமூக ஆர்வலர்புகார் மனு அளித்துள்ளார்.
அண்ணா ஹசாரே தோற்றம் அணிந்து பி.ஜே.பி கட்சினர் ஆரூத்ரா நிதி நிறுவன மோசடிகளில் ஈடுபட்டதை குறித்து திருவள்ளூர் மாவட்டம் ஆட்சியர்யிடம் சமூக ஆர்வலர் ஒருவர் புகார் மனு அளித்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தை சேர்ந்தவர் நந்தகுமார். இவருடைய மனைவி நர்மதா(38). நர்மதா தற்போது தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார்.இவர் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்அண்ணா ஹசாரே வேடம்அணிந்து கொண்டு மாவட்ட ஆட்சியர் ஆல் பி ஜான் வர்கீஸ்யிடம்பி.ஜே.பி அரசுக்கு எதிராக புகார் மனு ஒன்று அளித்துள்ளார்.
அதில் கூறியதாவது: பாஜக ஆட்சியில் தமிழகத்தின் மிகப்பெரிய நிதி நிறுவன மோசடி வழக்கு குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் அந்த வழக்கில் தொடர்புடையதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் விளையாட்டு பிரிவு நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி ஆகியோரையும் பொருளாதார. குற்றப்பிரிவு வழக்கு பட்டியலில் அவர்களை சேர்க்க வேண்டும் என்பதனை வலியுறுத்தியும் மாவட்ட ஆட்சியர் ஆல் பி ஜான் வர்கீஸ் சந்தித்து மனு அளிக்கப்பட்டது.இதனால் மாவட்ட ஆட்சியர்அலுவலகத்தில் சிறிது நேரம்பரபரப்பு ஏற்பட்டது.
தமிழகத்தின் தனியார் நிதி நிறுவனத்தில் மோசடி பின்னணியில் தமிழக பாஜக முக்கிய நிர்வாகிகளான பாஜக தலைவர் அண்ணாமலை, மற்றும் அமர் பிரசாத் ரெட்டிஉள்ளதாகவும் அவர்களை பொருளாதார குற்றவாளிகளாக அறிவித்து அவர்கள் பெயரை சேர்க்க வேண்டும். பாஜக ஊழலை கண்டித்தும் ஆருத்ரா நிதி நிறுவனத்தில் பாதிக்கப்பட்ட மக்களை ஒன்று திரட்டியும் திருத்தணியில் யாத்திரை ஈடுபடும் பாஜக தலைவர் அண்ணாமலைக்கு எதிராக தானும் பாத யாத்திரை தொடர போவதாக கூறினார்.