ஊத்துக்கோட்டை, பொன்னேரி அரசு அலுவலகங் களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் திடீர் சோதனை
திருவள்ளூர், ஊத்துக்கோட்டை, பொன்னேரி, ஆவடி உள்ளிட்ட அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீர் சோதனையால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் சார்பதிவாளர் அலுவலகத்தில் 7மணி நேரம் நீடித்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை. பத்திரப்பதிவிற்காக பொதுமக்கள் கொண்டு வந்திருந்த 71ஆயிரம் ரூபாய், ஊழியர்கள் வைத்திருந்த ஆயிரம் ரூபாய் என கணக்கில் வராத 72ஆயிரம் ரூபாய் ரொக்கம் பறிமுதல். ஊத்துக்கோட்டை சோதனைச்சாவடியில் 5மணி நேரம் நடைபெற்ற சோதனையில் 10500 ரூபாய் பறிமுதல்.
தமிழ்நாடு முழுவதும் பணப்புழக்கம் அதிகமுள்ள 12துறைகளை சார்ந்த பல்வேறு அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். இதன் ஒரு பகுதியாக, திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் இரண்டு ஆய்வாளர்கள் தலைமையில், சென்னை, ஆலந்தூர் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். பத்திரப்பதிவு நடத்த வந்த பொதுமக்கள், இடைத்தரகர்கள் என அனைவரையும் அலுவலகத்தின் உள்ளேயே வைத்து வெளிப்புற கதவை பூட்டிவிட்டு சோதனை நடத்தினர்.
சுமார் 7மணி நேரம் நீடித்த சோதனை முடிவில் பத்திரப் பதிவிற்காக பொதுமக்கள் கொண்டு வந்திருந்த 71ஆயிரம் மற்றும் அலுவலக ஊழியர்கள் வைத்திருந்த ஆயிரம் ரூபாய் என மொத்தமாக கணக்கில் வராத 72ஆயிரம் ரொக்க பணத்தை பறிமுதல் செய்யப்பட்டது. லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை காரணமாக பொன்னேரியில் பரபரப்பு நிலவியது. இதே போல தமிழ்நாடு - ஆந்திர எல்லையில் அமைந்துள்ள ஊத்துக்கோட்டை வட்டார போக்குவரத்து அலுவலக சோதனைச்சாவடியில் 5.மணி நேரம் நடைபெற்ற லஞ்ச ஒழிப்பு சோதனையில் 10500ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.