அதிமுக பொதுக்கூட்டம் : முன்னாள் அமைச்சர் வளர்மதி பங்கேற்பு..!

திருவள்ளூர் அருகே அதிமுக 53 வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு நடந்த பொதுக்கூட்டத்தில் . முன்னாள் அமைச்சர் வளர்மதி பங்கேற்று பேசினார்.;

Update: 2024-10-22 05:00 GMT

திருவள்ளூர் பொதுக்கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் வளர்மதி 

யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் என்பது எம்ஜிஆர் ஜெயலலிதாவோடு  முடிந்து விட்டது..யார் கட்சி ஆரம்பித்தாலும் அதிமுகவின் வாக்கு வங்கி குறையாது: கட்சி ஆரம்பிப்பவர்கள் எல்லாம் எம்ஜிஆர் ஆகிவிட முடியாது என நடிகர் விஜய்-ஐ  சூசகமாக சாடினார் முன்னாள் அதிமுக அமைச்சர் வளர்மதி.

அதிமுகவின் 53 வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு திருவள்ளூர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் பொதுக்கூட்டம் கடம்பத்தூர் ஒன்றிய செயலாளர் சூரகபுரம் சுதாகர் மற்றும் கடம்பத்தூர் ஒன்றிய நிர்வாகி பிலிக்ஸ் பாபு ஆகியோர் தலைமையில் நடைபெற்றது

திருவள்ளூர் அடுத்த மப்பேடு பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முன்னாள் அதிமுக அமைச்சர் வளர்மதி மற்றும் முன்னாள் அமைச்சர் பி வி ரமணா ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர்.

அப்போது பேசிய முன்னாள் அமைச்சர் வளர்மதி

52 ஆண்டு கட்சி 32 ஆண்டுகாலம் ஆட்சி செய்திருப்பது இந்தியாவிலேயே இதுதான் முதல் முறை இது எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவால் மட்டுமே சாத்தியமானது

படுத்துக்கொண்டு வெற்றி பெற்ற பெருமை புரட்சித்தலைவர் எம்ஜிஆரை சாரும், புரட்சித்தலைவர் தலைமுறை புரட்சித்தலைவி அம்மா தலைமுறை தற்பொழுது எடப்பாடியார் தலைமுறை என மூன்று தலைமுறைகளும் நாங்கள் பக்கத்தில் இருந்து பார்த்திருக்கிறோம்,

அதிமுகவை அழித்துவிட வேண்டுமென பல பேர் கணக்கு போடுகின்றனர் இந்த கட்சியே இல்லாத அளவிற்கு செய்துவிட வேண்டும் என்ற கணக்கு போடுகின்றனர் தப்பு தப்பாக பிரச்சாரம் செய்கின்றனர் தவறாக பிரச்சாரம் செய்கின்றனர், தோற்பது ஜெயிப்பது என்பது ஜனநாயகத்திலேயே நாம் சந்திக்க வேண்டிய ஒன்று,

எடப்பாடியார், அண்ணா திமுக தொண்டர்களுக்கு வீரத்தை கற்றுத் தருகிறார். தன்னம் தனியாக நின்று மக்களை சந்திக்க அதிமுகவின் செயல்களை மக்களிடத்தில் சொல்லி மக்கள் செல்வாக்கை பெற வேண்டும் என அறிவுறுத்தி வருகிறார்.

அதிமுக எடப்பாடியார் வற்புறுத்தியதன் காரணமாகவே திமுக அரசு பெண்களின் உரிமைப் தொகையாக 1000 ரூபாய் வழங்கியுள்ளது.அது என்ன அவர் அப்பா வீட்டு பணமா அரசுதான் தாலிக்குத்  தங்கம் அம்மா வழங்கிய மிக்சி, கிரைண்டர் திட்டத்தை நிறுத்தியே தற்பொழுது பெண்களுக்கு 1000 ரூபாய் வழங்கி வருகிறார். அதிமுக வழங்கிய ஒரு லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்களை நிறுத்திவிட்டு தற்பொழுது திமுக அரசு 1000 ரூபாய் கொடுத்து வருகிறோம் என்று பெருமை பேசுகிறார்.

மின்சாரம் தட்டுப்பாடு இருந்த போது கூட அண்டை மாநிலத்தில் இருந்து மின்சாரத்தை வாங்கி பொதுமக்களுக்கு வழங்கியது அதிமுக அம்மா அரசு ஆனால் திமுக அரசு மின் கட்டணத்தை ஏற்றி பொதுமக்களை சிரமப்படுத்துகிறது. தாய்மார்கள் அன்றாட சமையலுக்கு பயன்படுத்தும் பூண்டு விலை தற்பொழுது 400 ரூபாய் விற்கப்படுகிறது.

ரேஷன் கடைகளில் பருப்பு, பாமாயில் வழங்குவதில்லை அதைக் கேட்டால் ரேஷன் கடைக்காரர்கள் கடுப்பாக பதில் சொல்கின்றனர். மருத்துவமனையில் போதிய மருந்துகள் இல்லை.

செந்தில் பாலாஜி சிறைச்சாலையில் ஒரு வருடத்திற்கு மேல் இருந்து வந்த இரண்டு நாட்களிலேயே அமைச்சர் பதவி வழங்கியுள்ளது திமுக அரசு இதைவிட ஒரு வெட்கம் கெட்ட விஷயம் வேறொன்று இருக்கிறதா. புரட்சித்தலைவி அம்மா ஆட்சியில் சாதாரண நிர்வாகி கூட உயர்ந்த பொறுப்பில் அமர வைத்து அழகு பார்த்தவர் அம்மா தமிழக மக்களின் தன் குழந்தைகளாக எண்ணி அவர்களுக்கு தேவையான அனைத்து திட்டங்களையும் சிந்தித்து செயல்படுத்தியவர் அம்மா என்று,

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 68 பேர் உயிரிழந்தார்கள், அதை மறைப்பதற்கு திமுக ஆட்சி என்னென்னவோ செய்தது, கள்ளச்சரையம் குடித்து உயிர் விட்டவனுக்கு 10 லட்ச ரூபாய் கொடுத்துவிட்டால் போன உயிர் திரும்பி வருமா, இந்த செயலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாமல் கை விரித்த பொம்மை முதலமைச்சர் ஸ்டாலின் என்றும்,

திமுக விடம் கூட்டணி வலுவாக இருப்பதாக கூறுகின்றனர் ஆனால் எடப்பாடியார் மக்களுடன் கூட்டணி வைத்துள்ளார். திமுக கூட்டணியில் உள்ள திருமாவளவன் அடுத்த முதல்வராவது இலக்கு என்கிறார். இதற்கு பெயர் வலுவான கூட்டணியா என கேள்வி எழுப்பினார்.

தேர்தல் வருவதற்குள் நிறைய கட்சிகள் தடுமாற்றமாகும், நிறைய பேர் வருகிறார்கள் அரசியலுக்கு அண்ணா திமுகவிற்கு ஓட்டு வாங்கி குறைந்துவிடும் என்று பகல் கனவு காணுகின்றார்கள் யார் வந்தால் என்ன யார் போனால் என்ன

எங்களை யாரும் ஒன்னும் செய்ய முடியாது வரவங்க எல்லாம் எம்ஜிஆர் ஆக முடியாது,எல்லாரும் அரசியலுக்கு வருவது என்பது புரட்சித் தலைவர் எம்ஜிஆர் ஓட புரட்சித்தலைவி அம்மாவோட போய்விட்டது. தமிழ்நாட்டில் போதை கஞ்சா கலாச்சாராயம் ஆறாய் ஓடுகிறது.

ஆயிரம் கொடுத்து விட்டோம் இனி பெண்களை பெண்களின் ஓட்டு போட்டு விடுவார்கள் திமுக காரர்கள் நினைத்துக் கொண்டிருக்கின்றார்கள் நம்பாதீர்கள் அம்மாவை எண்ணிப் பாருங்கள் எடப்பாடியார் மீண்டும் தமிழ்நாட்டின் முதலமைச்சராக வரவேண்டும் என்பதை உறுதி ஏற்க வேண்டும்,

ஸ்டாலினையும் எடப்பாடியும் நடக்க விடுங்கள் யார் ஜெயிப்பார்கள் என பார்ப்போம் அமெரிக்காவில் போய் தான் சைக்கிள் ஓட்ட வேண்டுமா? மெட்ராஸில் ஓட்டினால் சைக்கிள் ஓடாதா, அமெரிக்காவிற்கு போய் சைக்கிள் ஓட்டுவதற்கு கணவனும் மனைவியும் உல்லாசப் பயணம்  போயிட்டு வந்திருக்கிறார்கள் என அவர் பேசினார்.

Tags:    

Similar News