வரும் தேர்தலில் திமுகவுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள் : முன்னாள் அமைச்சர்..!

பெரியபாளையத்தில் நடைபெற்ற செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் கலந்துகொண்டார்.;

Update: 2024-10-26 06:30 GMT

கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் பெஞ்சமின்.

பெரியபாளையத்தில் திருவள்ளூர் வடக்கு மாவட்ட எல்லாபுரம் வடக்கு ஒன்றிய அதிமுக சார்பில் செயல் வீரர்கள் மற்றும் செயல் வீராங்கனைகள் ஆலோசனைக் கூட்டம் முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் பங்கேற்று பேசினார்.

திருவள்ளூர் வடக்கு மாவட்டம் எல்லாபுரம் வடக்கு ஒன்றிய அதிமுக சார்பில் பெரியபாளையத்தில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற செயல் வீரர்கள் மற்றும் செயல் வீராங்கனைகள் ஆலோசனைக் கூட்டம் ஒன்றிய அவைத் தலைவர் எஸ்.விஜயன் தலைமையில் நடைபெற்றது.

மாவட்ட அம்மா பேரவை செயலாளர் எல்லாபுரம் வடக்கு ஒன்றிய செயலாளரும் முன்னாள் கும்மிடிப்பூண்டி சட்டப்பேரவை உறுப்பினருமான கே.எஸ். விஜயகுமார் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் அனைவரையும் ஒன்றிய இணை செயலாளர் வித்யா லட்சுமி வேதகிரி, ஒன்றிய துணைச் செயலாளர்கள் காயத்ரி கோதண்டன்,மோகன், தயாகர் ரெட்டி, மாவட்ட பிரதிநிதிகள் விவேகானந்தன், ரத்தினம், பைலட் சேகர் ஆகியோர் பங்கெடுத்தனர்.

எல்லாபுரம் ஒன்றிய குழு துணை தலைவர் வழக்கறிஞர் சுரேஷ் வரவேற்றார். நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக முன்னாள் பொன்னேரி சட்டமன்ற உறுப்பினரும் திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக செயலாளருமான சிறுநியம் பி.பலராமன், கழக அமைப்பு செயலாளரும் முன்னாள் அமைச்சருமான ப. பெஞ்சமின், ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர் .

இதில் பேசிய முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் திமுக ஆட்சிக்கு 2026 ஆம் ஆண்டு தேர்தலில் தமிழக மக்கள் சரியான பதிலடி கொடுப்பார்கள் எனவும், அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட பல திட்டங்களை செயல்படுத்தவில்லை. புரட்சித்தலைவி இதய தெய்வம் அம்மா என்றும் அதே வழியில் வந்த எடப்பாடியார் மக்களுக்கு ஏற்ற திட்டங்களை அறிவித்து மக்களின் வாழ்க்கையில் ஒளியை ஏற்றியவர்.

மக்கள்  வருகின்ற 2026 ஆம் ஆண்டு தேர்தலில் திமுக ஆட்சிக்கு மக்கள் சரியான பாடத்தை புகட்டுவார்கள்.ஒவ்வொரு அதிமுக தொண்டனும் உழைத்து மீண்டும் அம்மா ஆட்சி நிலை நிறுத்தி எடப்பாடியார் மீண்டும் முதலமைச்சராகி மக்களுக்கு தமிழ்நாட்டுக்கு சேவை செய்ய நம் அயராது உழைத்திட வேண்டும் என அவர் இவ்வாறு பேசினார்.

இதில் மாவட்ட துணை செயலாளர்கள் எஸ்.எம்.ஸ்ரீதர், சியாமளா தங்கராஜ், எம்ஜிஆர் இளைஞரணி மாவட்ட செயலாளர் பானு பிரசாத், மாவட்ட மாணவரணி செயலாளர் ராகேஷ், நிர்வாகிகள் ராஜீவ் காந்தி, புஷ்பராஜ், பெரியபாளையம் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் மகேஷ்,பார்த்திபன், முன்னாள் ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் சீனிவாசன், உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி வந்த நிர்வாகிகள் முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் முன்னிலையில் அதிமுகவில் இணைத்துக் கொண்டனர் அவர்களுக்கு முன்னாள் அமைச்சர் பெஞ்சமின்,மாவட்ட செயலாளர் பலராமன் ஆகியோர் பொன்னாடை போர்த்தி வாழ்த்துகளை தெரிவித்தனர்.

Tags:    

Similar News