குற்ற வழக்கில் சேர்ப்பு: வட்டாட்சியர் மீது வழக்கறிஞர்கள் புகார்

குற்ற வழக்கில் சம்பந்தமே இல்லாத வழக்கறிஞர் மீது கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் வேண்டு மென்றே புகார் அளித்ததாக கூறப்படுகிறது

Update: 2023-04-29 03:15 GMT

குற்ற வழக்கில் சம்மந்தமே இல்லாத வழக்கறிஞர் மீது கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் வேண்டுமென்றே டிஎஸ்பியிடம் புகார் கொடுத்து குற்றவழக்கில் சேர்த்திருப்பதை உடனடியாக நீக்க கோரி வழக்கறிஞர்கள் சங்கம் சார்பாக  ஆட்சியர் மற்றும் எஸ்பி ஆகியோரிடம் புகார் அளித்தனர்.

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி வட்டம், காயிலார்மேடு கிராமத்தைச் சேர்ந்த நந்திவர்மன் என்பவர் அந்த கிராமத்தில் உள்ள நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ததாக கூறப்படுகிறது. அது சம்பந்தமாக சில ஆவணங்களை தகவலாகப் பெற வேண்,டி கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் ப்ரீத்தியிடம் கேட்டு வழக்கறிஞர் ஆனந்தராஜூடன் செல்கிறார். ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக காத்திருக்க வைத்த காரணத்தால் பொன்னேரி சார் ஆட்சியரிடம் தகவல் தெரிவித்துள்ளார்.

அதனையறிந்த வட்டாட்சியர் வழக்கறிஞரை தரக்குறைவாக பேசியுள்ளார். இது குறித்து வழக்கு தொடுத்தவர் வட்டாட்சியரிடம்  வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார். அதை வீடியோவாகவும் எடுத்துள்ளார். இதனையடுத்து வழக்கு தொடுத்தவர் மற்றும் சம்பந்தமே இல்லாமல் வழக்கறிஞர் ஆனந்தராஜ் மீது டிஎஸ்பி யிடம் புகார் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதனால் சம்பந்தமே இல்லாத ஒரு குற்றவழக்கில் பொன்னேரி டிஎஸ்பி வழக்குப் பதிவு செய்தது குறித்து திருவள்ளூர் மாவட்ட எஸ்பி., மற்றும் ஆட்சியர் ஆகியோரிடம் கும்மிடிப்பூண்டி வழக்கறிஞர் சங்கம் சார்பாக புகார் மனு அளித்துள்ளனர்.

விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்பி. பா.சிபாஸ்கல்யாண் தெரிவித்ததாக வழக்கறிஞர்கள் தெரிவித்தனர். கும்மிடிப்பூண்டி வட்டாட்சியராக பொறுப்பேற்று ஒரு சில நாட்களே ஆன நிலையில் தொடர்ந்து இது போன்று அராஜக செயல்களில் ஈடுபடுவதாகவும் குற்றம் சாட்டினர். மக்களுக்கு சேவை செய்யும் எண்ணம் இல்லாமல் ஆணவப் போக்கில் செயல்படுவதாகவும் குற்றம் சாட்டினர். மாவட்ட எஸ்பி மற்றும் ஆட்சியர் ஆகியோர் நடவடிக்கை எடுக்காத பட்டத்தில் மிகப் பெரிய போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் எச்சரித்தனர்.


Tags:    

Similar News