இளம் பெண்ணிடம் ஆன்லைன் பணம் மோசடி!
புழல் பகுதியில் இளம் பெண்ணிடம் 25,000 ஆன்லைனில் மோசடி செய்த சம்பவம் பரபரப்பு போலீசார் விசாரணை.
புழலில் இளம்பெண்ணிடம் பகுதிநேர வேலை எனக்கூறி நூதன முறையில் ரூ.25000 ஆன்லைன் மோசடி. 2 பிரிவுகளில் வழக்கு பதிந்து போலீசார் விசாரணை.
திருவள்ளூர் மாவட்டம், மாதவரம் தொகுதி, புழலை சேர்ந்த காயத்ரி (29) என்பவரது செல்போனுக்கு அண்மையில் குறுஞ்செய்தி ஒன்று வந்துள்ளது. அதில் ஆன்லைனில் பகுதி நேர வேலை வழங்குவதாக கூறி தாங்கள் கொடுக்கும் டாஸ்க்குளை நிறைவேற்ற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்பணத்தை செலுத்திய பின்னர் ஒவ்வொரு டாஸ்க் முடிக்கும் போது உங்களுடைய கணக்கில் செலுத்திய முன்பணத்துடன் சேர்ந்து போனஸ் வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. டெலிகிராமில் லிங்க் அனுப்பி Work from Home என்றும் பகுதி நேர வேலை எனவும் கூறியுள்ளனர்.
முதலில் 1000 செலுத்தி டாஸ்க் முடித்த பிறகு 1800 ரூபாய் கிடைத்துள்ளது. அடுத்ததாக 3000 ரூபாய் அனுப்புமாறு கூறியதை தொடர்ந்து 6000ரூபாய் அனுப்பி டாஸ்க் முடித்த பிறகு 8477ரூபாய் கிடைத்துள்ளது. அதனை தொடர்ந்து அடுத்தடுத்து 5000 ரூபாய் பணம் செலுத்துமாறும், மீண்டும் 25000 ரூபாய் செலுத்துமாறு கூறியதை தொடர்ந்து இரண்டு முறை பணத்தை செலுத்தியுள்ளார். டாஸ்கை முடித்த பிறகு மேலும் 60000 ரூபாய் பணத்தை செலுத்த வேண்டும் என கூறியதால் ஆன்லைன் மோசடி கும்பலிடம் சிக்கி பணத்தை இழந்ததை உணர்ந்துள்ளார்.
ஆன்லைனில் ரூ.25000/- மோசடி செய்த சம்பவம் தொடர்பாக காயத்ரி புழல் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் மோசடி, தொழில்நுட்ப சட்டப்பிரிவு என இரண்டு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து புழல் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சமீபத்தில் இது போன்ற ஆன்லைன் மோசடி சம்பவங்கள் புழல் பகுதியில் அதிகமாக நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது.