திருமணமே செய்துகொள்ளாமல் குடும்பத்திற்காக பாடுபடும் பெண்!
அழிஞ்சிவாக்கத்தில் குடும்ப வறுமை காரணத்தினால் திருமணமே செய்து கொள்ளாமல் தன் குடும்பத்தை காப்பாற்றி வரும் பெண் குட்டிமா.
செங்குன்றம் அருகே திருமணமே செய்துகொள்ளாமல் தன் குடும்பத்தின் வறுமை காரணத்தினால் சலவை தொழில் செய்யும் குட்டிமா என்னும் இளம்பெண்
திருவள்ளூர் மாவட்டம், மாதவரம் தொகுதி நல்லூர் ஊராட்சி ஆட்டந்தாங்கல் கிராமத்தில் வசித்துவரும் செல்வராஜ் (வயது 75) இவர் ஒரு சலவை தொழிலாளி இவருடைய மகள் குட்டிமா (வயது 29) இவர் கடந்த 16 வருடங்களாக புழல் ஒன்றியம் அழிஞ்சிவாக்கம் ஊராட்சியில் வாடகைக்கு கடை எடுத்து சலவை தொழில் செய்து வருகிறார்.இவருடைய குடும்பம் மிகவும் ஏழ்மையான குடும்பமாகும்.இதனால் தன் தந்தையுடன் சலவை தொழிலில் ஈடுப்பட்டு வந்துள்ளார். தற்போது தனது தந்தைக்கு வயது முதிர்வு காணத்தால் சலவை தொழிலை செய்ய முடியாத நிலையில் இருப்பதால் தனது குடும்பத்திற்காக தானே செய்துவருகிறார். இது குறித்து நமது நிருபர் குட்டிமாவிடம் கேட்டபோது
குடும்ப கஷ்டத்திற்காக இதுவரை திருமணமே செய்து கொள்ளாமல் சலவை தொழிலை செய்து அதில் கிடைக்கும் வருமானத்தை வைத்து தன் தந்தை, தாயை குடும்பத்தையும் காப்பாற்றி வருவதாகவும். மேலும் இந்த சலவை தொழிலில் கிடைக்கும் வருமானம் போதுமானதாக இல்லை என்றும்,இது போன்று சலவை தொழிலை நம்பி வாழ்ந்து வரும் தொழிலார்களுக்கு அரசு முன்வந்து மற்ற தொழிலாளர்களுக்கு வழங்கி வரும் சலுகைகள் அவர்களுக்கும் வழங்கவேண்டும் என்று சலவை தொழிலாளி குட்டிமா கோரிக்கை வைத்தனர்.
இந்த காலகட்டத்தில் மகன்கள் உள்ள வீட்டில் குடும்பத்தை சரி வரை கவனிக்க முடியாமல் பாரமென்று நினைத்து தாய், தந்தை விட்டு செல்லும் காலகட்டத்தில் ஒரு பெண் தன் குடும்பத்திற்காக தன் வாழ்க்கை நினைத்து கூட பார்த்து கொள்ளாமல் குடும்பத்திற்காக பாடுபடும் இதுபோன்று பெண்கள் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்றும், இதுபோன்ற ஏழை தொழிலாளர்களை அரசு வாழ்க்கை மேம்படுத்த அரசு முன்வந்து மற்ற தொழில்களில் அரசு கடன் மற்றும் சலுகைகளை வழங்குவது போல் இந்த சலவை தொழிலை நம்பி உள்ளவர்களை அவர்களுக்கும் சலுகைகளை வழங்க வேண்டும் என பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.