திருவள்ளூரில் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.7 லட்சம், 8 சவரன் நகைக்கொள்ளை

திருவள்ளூரில் வீட்டின் பின்பக்க பூட்டை உடைத்து 7 லட்சம் ரொக்கம், 8 சவரன் நகை கொள்ளையடித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.;

Update: 2021-08-21 15:16 GMT

பைல் படம்.

திருவள்ளுவர் தனலட்சுமி நகரை சேர்ந்தவர் தமிழரசன் (35). இவரது மனைவி பிரியா தனியார் தொழிற்சாலை பணிபுரிந்து வருகிறார். இவர் தாய் வீட்டிற்குச் சென்றிருப்பதால், தமிழரசன் அருகே உள்ள தனது தங்கை வீட்டிற்கு சென்றுள்ளார்.

அன்று இரவு வீட்டிற்கு வந்து திறந்து பார்த்தபோது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைத்திருந்த 8 சவரன் நகை,250 கிராம் கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் 7 லட்சம் பணம் கொள்ளை அடித்துச் சென்றது தெரியவந்தது.

வீடு கட்டுவதற்காக 7 லட்ச ரூபாய் கடன் வாங்கி வைத்து இருப்பதாகவும் அந்த பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றதால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.

இதுகுறித்து தமிழரசன் திருவள்ளூர் நகர காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து கொள்ளையடித்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News